டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு.. புதுப்பொலிவுடன் 5-ஆவது முறையாக ரேபரேலியில் களமிறங்குகிறார் சோனியா!

Google Oneindia Tamil News

டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரேபரேலி லோக்சபா தொகுதியில் 5-ஆவது முறையாக போட்டியிடுகிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி.

நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே தேர்தல் பணிகளை உற்சாகத்துடன் செய்து வந்த அரசியல் கட்சியினர் தற்போது பெரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியானது காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு ஒதுக்கப்பட்டது. இது சமீபத்தில் அக்கட்சி சார்பில் வெளியான வேட்பாளர் பட்டியலில் இருந்தது.

அந்தமான் தீவுகளில் லேசான நிலநடுக்கம்.. மக்கள் அச்சம் அந்தமான் தீவுகளில் லேசான நிலநடுக்கம்.. மக்கள் அச்சம்

மக்களவை தொகுதி

மக்களவை தொகுதி

ரேபரேலி தொகுதி காங்கிரஸின் கோட்டையாக இருந்து வருகிறது. இங்கு 1977-இல் நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் இந்திரா காந்தி தோல்வியடைந்தார். இதையடுத்து நடந்த அனைத்து தேர்தல்களிலும் அக்கட்சி வெற்றி பெற்றது.

5-ஆவது முறை

5-ஆவது முறை

மாமியாரின் தொகுதியான ரேபரேலியில் கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் சோனியா காந்தி போட்டியிட்டு வருகிறார். தொடர்ந்து வெற்றி பெற்று வரும் இவர் தற்போது 5-ஆவது முறையாக போட்டியிடுகிறார்.

பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி

அண்மையில் சமீபத்தில் சோனியாகாந்திக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனிடையே உத்தரப்பிரதேசத்தில் கிழக்கு பிராந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார்.

ரேபரேலி

ரேபரேலி

சோனியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் இவருக்கு பதிலாக அத்தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார் என கருதப்பட்டது. ஆனால் அவர் போட்டியிடவில்லை என ஏற்கெனவே தெரிவித்துவிட்டார். இதையடுத்து சோனியாகாந்தியே ரேபரேலியில் போட்டியிடுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

English summary
Congress EX President Sonia Gandhi to contest in Rae Beareli LS constituency for 5th time. Cadres are happy over this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X