டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிவசேனாவை ஆதரிக்கவே கூடாது... மும்பை காங்கிரஸுக்கு கேரளா காங். கடும் எதிர்ப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    Sources says that Uddhav Thackeray will be CM of Maharastra

    டெல்லி: சிவசேனாவை ஆதரிப்பதால் கொள்கை முரண்பாடுகள் எதுவும் இல்லை.. கடந்த காலங்களில் பால்தாக்கரேவுடன் கூட்டணி அமைத்திருக்கிறோம் என்கிறது காங்கிரஸின் மும்பை பெருந்தலைகள். ஆனால் சிவசேனா மதவாத கட்சிதான்..ஆதரிக்கவே கூடாது என்கிறது காங்கிரஸின் கேரளா தலைவர்கள்.

    மகாராஷ்டிரா அரசியலில் உருவான புயல் இப்போது டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் மையம் கொண்டிருக்கிறது. சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு தருவதா? இல்லையா? என்கிற குழப்பத்தில் இருந்து வருகிறது காங்கிரஸ்.

    சின்ன பையன் நீங்க.. முதல்வர் வாய்ப்பை இழக்கும் ஆதித்யா.. உத்தவ் தாக்கரே மனமாற்றம்.. என்ன நடந்தது?சின்ன பையன் நீங்க.. முதல்வர் வாய்ப்பை இழக்கும் ஆதித்யா.. உத்தவ் தாக்கரே மனமாற்றம்.. என்ன நடந்தது?

    அன்று உதவிய பால் தாக்கரே

    அன்று உதவிய பால் தாக்கரே

    மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர்களைப் பொறுத்தவரையில் பாஜக உருவாவதற்கு முன்னரும் பின்னரும் சிவசேனா- காங்கிரஸ் உறவுகள் இருந்து வந்தது வரலாறுதானே என்கின்றனர். 1967 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி, விகே கிருஷ்ண மேனனுக்கு சீட் தர மறுத்ததால் அவர் வடகிழக்கு மும்பையில் சுயேட்சையாக போட்டியிட்டார்.

    அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த இந்திரா காந்தி, எப்படியாவது விகே கிருஷ்ணமேனனை தோற்கடிக்க வேண்டும் என முடிவு செய்தார். அவருக்கு அப்போது கை கொடுத்தது சிவசேனா தலைவர் பால்தாக்கரேதான். அத்தேர்தலில் இந்திரா நிறுத்திய பார்வேவை வெல்லவும் வைத்தார் தாக்கரே.

    இந்திராவுக்கு உதவிய பால்தாக்கரே

    இந்திராவுக்கு உதவிய பால்தாக்கரே

    1975-ல் இந்திரா காந்தி அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை முழு வீச்சில் ஆதரித்தவர் பால்தாக்கரே. அவசரநிலை பிரகடனம் முடிந்து நடைபெற்ற தேர்தலில் கூட காங்கிரஸுடன் தான் கூட்டணி அமைத்தார் பால் தாக்கரே. 1980 தேர்தலிலும் காங்கிரஸுடன் பால்தாக்கரே கூட்டணி நீடித்தது.

    காங்.-க்கு ஆதரவு

    காங்.-க்கு ஆதரவு

    2007 ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸின் பிரதீபா பாட்டீலையும் 2012-ல் பிரணாப் முகர்ஜிக்கும் ஆதரவு கொடுத்தது சிவசேனா. 2012-ல் பால்தாக்கரே மறைந்த போது மாநிலத்தில் ஆட்சியில் இருந்த தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் அரசு அவரை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்தது. இப்படியான வரலாறு இருக்கும்போது சிவசேனா ஆட்சி அமைக்க ஏன் ஆதரவு தர தயக்கம் வேண்டும் என்கின்றனர் மும்பை காங்கிரஸ் தலைவர்கள்.

    எதிர்க்கும் கேரளா லாபி

    எதிர்க்கும் கேரளா லாபி

    ஆனால் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களான ஏ.கே. அந்தோணி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் சிவசேனா, மதவாத கட்சி; அதனுடன் நாம் கை கோர்க்கக் கூடாது என பிடிவாதமாக சோனியா காந்திக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதனால் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளது.

    English summary
    Congress Interim President Sonia Gandhi is facing the Pressure from Kerala lobby who opposed to support to Shiv Sena.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X