டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2004 ஞாபகம் இருக்குதா..? வேட்புமனு தாக்கல் செய்த கையோடு, பாஜகவுக்கு சோனியா காந்தி செம வார்னிங்

Google Oneindia Tamil News

Recommended Video

    Sonia Gandhi Warns Bjp: வேட்பு மனு தாக்கல் செய்த சோனியா.. பாஜகவுக்கு வார்னிங்- வீடியோ

    டெல்லி: ரேபரேலி தொகுதியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான, சோனியா காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    உத்தர பிரதேசத்திலுள்ள ரேபரேலி லோக்சபா தொகுதி, காங்கிரஸின் கோட்டையாக பார்க்கப்படுகிறது. 2004ம் ஆண்டு பொதுத் தேர்தல் முதலே, சோனியா காந்தி இந்த தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்.

    17வது லோக்சபா தேர்தலிலும், ரேபரேலி தொகுதியில் போட்டியிட முடிவு செய்து களம் கண்டுள்ளார் சோனியா காந்தி. இதையொட்டி இன்று ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    அமேதி தொகுதியில்.. லேசர் துப்பாக்கியால் ராகுல் காந்தியை 7 முறை கொல்ல முயற்சி.. காங் அதிர்ச்சி புகார் அமேதி தொகுதியில்.. லேசர் துப்பாக்கியால் ராகுல் காந்தியை 7 முறை கொல்ல முயற்சி.. காங் அதிர்ச்சி புகார்

    சிறப்பு பூஜைகள்

    சிறப்பு பூஜைகள்

    ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பாக, சிறப்பு பூஜைகளை மேற்கொண்டார் அவர். அப்போது, அவரது மகனும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோரும் ஹோம பூஜைகளில் பங்கேற்றனர். பிரியங்கா காந்தியின் குழந்தைகள், ரைஹான் மற்றும் மிராயாவும் பூஜைகளில் பங்கேற்றனர்.

    தொண்டர் படை

    தொண்டர் படை

    ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும், அருகருகே அமர்ந்திருக்க நாற்காலியொன்றில் சோனியா காந்தி அமர்ந்திருந்ததை பார்க்க முடிந்தது. இதன் பிறகு தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது திரளாக காங்கிரஸ் தொண்டர்கள் உடன் சென்றனர்.

    தீவிர அரசியலுக்கு ஓய்வு

    72 வயதாகும் சோனியா காந்தி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, பொது நிகழ்ச்சிகளை பெரும்பாலும் சோனியா காந்தி தவிர்த்துவிடுவார். தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றதால் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் தலைவர் பதவியை வழங்கினார்.

    நினைவு இருக்கிறதா

    நினைவு இருக்கிறதா

    இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, மோடியை வெல்ல முடியாத தலைவர் என நினைத்து விடாதீர்கள். வாஜ்பாய் அப்படித்தான் கருதப்பட்டார். ஆனால், 2004ம் ஆண்டு தேர்தலை மறந்துவிடாதீர்கள் என்று தெரிவித்தார். 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில், வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பெருத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடித்தது. பிறகு 2009ம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் காங்கிரசே ஆட்சியை பிடித்தது. இருமுறையும், மன்மோகன்சிங் பிரதமராக பதவி வகித்தார். இதைத்தான் சோனியா காந்தி பாஜகவுக்கு இன்று எச்சரிக்கையாக தெரிவித்துள்ளார்.

    English summary
    UPA chairperson Sonia Gandhi today said "don't forget 2004" in a message to the BJP before filing her nomination from Raebareli in Uttar Pradesh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X