டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க சோனியா ஒப்புதல் என தகவல்

Google Oneindia Tamil News

Recommended Video

    சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க சோனியா ஒப்புதல் என தகவல்

    டெல்லி: மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து புதிய அரசு அமைக்க காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் வழங்கிவிட்டதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்(என்சிபி), சிவசேனா இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்தன. இதற்கான குறைந்தபட்ச செயல் திட்டத்தையும் மூன்று கட்சிகளும் உருவாக்கின.

    Sonia Gandhi gives nod to alliance with Shiv Sena for new govt formation in Maharashtra

    ஆனால் திடீரென இந்த முயற்சிகளில் முன்னேற்றம் எதுவும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் டெல்லியில் சோனியா காந்தியை என்சிபி தலைவர் சரத்பவார் சந்தித்து பேசினார்.

    இதனிடையே காங்கிரஸ், என்சிபியுடன் இணைந்து அரசு அமைக்க சிவசேனாவின் 17 எம்.எல்.ஏக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் இம்மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்குமா? என்கிற கேள்வி எழுந்தது.

    Sonia Gandhi gives nod to alliance with Shiv Sena for new govt formation in Maharashtra

    இந்நிலையில் இன்று சிவசேனாவுடன் இணைந்து புதிய அரசை அமைக்க சோனியா காந்தி ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து டெல்லியில் உள்ள சரத்பவார் இல்லத்தில் என்சிபி, காங்கிரஸ் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    Sonia Gandhi gives nod to alliance with Shiv Sena for new govt formation in Maharashtra

    இதனிடையே என்சிபி, காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைக்க எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக வெளியான செய்திகள் வதந்திகள் என சிவசேனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    According to the sources Congress Interim president Sonia Gandhi gave approval to an alliance with Shiv Sena to form a government in Maharashtra.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X