டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2024 பிரதமர் தேர்தல்.. “ரெடி”யாகும் சோனியா! டெல்லி வரும் நிதீஷ், லாலு - “6 ஆண்டு”க்கு பின் சந்திப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: அண்மையில் பாஜக கூட்டணியிலிருந்து பிரிந்து சென்ற நிதீஷ் குமார், ஆர்.ஜே.டி. காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அவரையும் ஆர்.ஜே.டி. கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவை இன்று சந்திக்கிறார் சோனியா காந்தி

பீகார் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி அரசை நடத்தி வந்த நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி கடந்த ஆண்டு மோதல்களின் காரணமாக கூட்டணியை முறித்துக் கொண்டு ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி ஆட்சியை அமைத்தது.

இந்த நிலையில் பீகார் முதலமைச்சராக பதவியேற்ற கையோடு 2024 மக்களவை தேர்தலுக்காக தயாராகி வருகிறார் நிதீஷ் குமார். தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் உடனான சந்திப்பு தொடங்கி அடுத்தடுத்த சந்திப்புகளை நடத்தி வருகிறார்.

 சசி தரூருக்கு கிரீன் சிக்னல்? அப்செட் ஆன அசோக் கெலாட்.. நேரடியாக போன் போட்ட சோனியா! நடப்பது என்ன சசி தரூருக்கு கிரீன் சிக்னல்? அப்செட் ஆன அசோக் கெலாட்.. நேரடியாக போன் போட்ட சோனியா! நடப்பது என்ன

 தலைவர்களுடன் சந்திப்பு

தலைவர்களுடன் சந்திப்பு

இந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் 4 நாள் பயணமாக டெல்லி சென்ற அவர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அதேபோல் சமாஜ்வாடி கட்சித் தலைவர்கள் முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் எச்சூரி, ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோரை சந்தித்தார்.

 சோனியா காந்தி

சோனியா காந்தி

"எங்கள் முதன்மையான நோக்கம் என்பது நாட்டு நலனுக்காக ஒற்றுமையை கட்டமைப்பதுதான். யார் தலைவர் என்பது பின்னர் முடிவு செய்யப்படும். பிரபலமான முகத்தை விட ஒற்றுமையான கூட்டணியே நாட்டுக்கு அவசியம். சோனியா காந்தி வெளிநாட்டில் இருந்து டெல்லி திரும்பிய பிறகு மீண்டும் அங்கு சென்று அவரை சந்திக்க உள்ளேன்." என்றார்.

 இன்று சந்திப்பு

இன்று சந்திப்பு

இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி, ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை என பரபரப்புடன் காணப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்தியா திரும்பிய சோனியா காந்தி இன்று பீகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமாரையும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவையும் சந்திக்க இருக்கிறார்.

 6 ஆண்டுகளுக்கு பின்

6 ஆண்டுகளுக்கு பின்

இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் நிறுவனர் சௌதாரி தேவி லாலின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் நடைபெற இருக்கும் பேரணியில் நிதீஷ் குமார், லாலு பிரசாத் ஆகியோர் பங்கேற்க வருகை தருகிறார்கள். அப்போது இருவரும் சோனியா காந்தியை சந்திக்க உள்ளார்கள். சோனியா காந்தியை இவ்விரு தலைவர்களும் 6 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Nitish Kumar, who recently broke away from the BJP alliance and formed a coalition government along with the Congress party. Sonia Gandhi to meet party RJD president Lalu Prasad Yadav and Bihar CM Nitish Kumar today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X