டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு.. பாஜகவின் கேம் ஓவர்.. சோனியா.. நவாப் மாலிக் வரவேற்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    மகாராஷ்டிராவில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு!

    டெல்லி: மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வரவேற்றுள்ளார்.

    மகாராஷ்டிராவில் பாஜகவின் பட்னாவிஸ் தலைமையிலான அரசுக்கு எதிராக நாளை மாலை 5மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக தங்களுக்கு உள்ள ஆதரவை பாஜக நாளையே நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

     Sonia Gandhi, NCP welcomes Supreme Courts order to conduct the floor test in Maharashtra tomorrow

    இந்நிலையில் மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வரவேற்றுள்ளார். சிவசேனா, காங்கிரஸ் மற்றும் என்சிபி தலைமையிலான மகாராஷ்டிரா முற்போக்கு முன்னணிக்கே வெற்றி கிடைக்கும் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

    பதவி ஆசையால் தேனிக்கு சென்றேன்... ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சுபதவி ஆசையால் தேனிக்கு சென்றேன்... ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கூறுகையில், நீதிமன்றம் இன்று தனது உத்தரவை வழங்கி உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடக்கும். எங்களிடம் போதிய ஆதரவு உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இந்திய ஜனநாயகத்தின் ஒரு மைல்கல். நாளை மாலை 5ணிக்கு எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புகிறோம். பாஜகவின் கேம் ஓவர்.." என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Congress interim president Sonia Gandhi, NCP senior leader Nawab Malik welcomes Supreme Court's order to conduct the floor test in Maharashtra tomorrow
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X