டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மனம்போன போக்கில் மசோதாக்களை நிறைவேற்றும் மத்திய அரசு.. டெல்லி பேரணியில் சோனியா பேச்சு

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜகவினர் மனம் போன போக்கில் மசோதாக்களை நிறைவேற்றுவதும் ஜனாதிபதி ஆட்சியை நீக்குவதும் செய்கிறார்கள் என காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலை, குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, விவசாயிகளின் துயரம், வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக "தேசத்தை காப்போம்" என்ற தலைப்பினாலான பேரணிக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

பிரியங்கா காந்தி

இன்று டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சட்டப்பிரிவு

இந்த கூட்டத்தில் சோனியா காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் கூறுகையில் இன்றைய அரசியல் சூழல் எப்படி உள்ளது? நினைத்த மாத்திரத்தில் ஒரு சட்டவிதியை அமல்படுத்துவதையும் சட்டப்பிரிவை நீக்குவதையும் செய்கிறார்கள்.

அமித்ஷா

அமித்ஷா

அது போல் மாநிலத்தின் அந்தஸ்தையும் மாற்றுகிறார்கள். நினைத்த நேரத்தில் ஜனாதிபதி ஆட்சியை நீக்குவதையும் விவாதங்களே இல்லாமல் மசோதாக்களை நிறைவேற்றுவதையும் செய்கிறார்கள். மோடிக்கும் அமித்ஷாவுக்கும் மக்களை பற்றி கவலையில்லை.

மோடியும் அமித்ஷாவும்

மோடியும் அமித்ஷாவும்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவால் அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்களை போல் இந்தியாவின் ஆன்மாவை துண்டாடிவிடும். இதை மோடியும் அமித்ஷாவும் உணரவில்லை என்றார்.

English summary
Congress's Interim President Sonia Gandhi says that Modi-Shah are not bothered at all that Citizenship Amendment Act will shred the soul of India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X