டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிரடி திருப்பம்.. காங். அதிருப்தி தலைவர்களுடன் சோனியா காந்தி நாளை ஆலோசனை.. எகிறும் எதிர்பார்ப்பு

கட்சியின் அதிருப்தி தலைவர்களை நாளை சந்திக்கிறார் சோனியா காந்தி

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் தலைமைக்கு எதிராக கடிதம் எழுதிய, 23 அதிருப்தி தலைவர்கள், கட்சித் தலைவர் சோனியா காந்தியை நாளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

கடந்த வருடம் 2019 லோக்சபா தேர்தல் மோசமான தோல்விக்கு பிறகு, காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி அந்த பதவியை ராஜினாமா செய்தார்... எனவே காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக, சோனியா காந்தி பொறுப்பேற்றார்.

அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில் தோல்வியை கண்டு துவண்டுபோன கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் கடந்த ஆகஸ்ட் மாதம் கட்சி தலைமைக்கு கடிதம் எழுதினர்... அதில் கட்சியில் அதிரடியான சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும், முழுநேர நிலையான தலைவர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தனர்.

"செம ட்விஸ்ட்".. ரஜினியை தூக்கி சாப்பிட்ட சீமான்.. டஃப் கொடுக்கும் கமல்.. சுவாரஸ்ய சர்வே!

 கமல்நாத்

கமல்நாத்

மேலும், தலைமை மீதான தங்கள் அதிருப்தியை அவர்கள் வெளிப்படுத்தி இருந்தனர்.. என்றாலும், இதற்கு சோனியா எந்தவித பதிலும் தரவில்லை. இந்த சூழ்நிலையில்தான், அதிருப்தி தலைவர்களை சோனியா காந்தி சந்தித்து ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.. இந்த கூட்டத்துக்கு மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் ஏற்பாடு செய்திருக்கிறார்.

 படுதோல்வி

படுதோல்வி

வரும் ஜனவரியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.. அந்த கட்சியில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதால், அந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்தும் சோனியா நாளை ஆலோசனை மேற்கொள்வார். அதுமட்டுமில்லை, சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலிலும், காங்கிரஸ் கட்சியின் படுதோல்வியை அடைந்தது.. இதற்கு பிறகு கட்சி தலைமைக்கு எதிராக மறுபடியும் குரல்கள் ஓங்கி ஒலித்தன.

 சமாதானம்

சமாதானம்

அப்போது, முன்னாள் அமைச்சர்களான கபில் சிபல், குலாம் நபி ஆசாத், சிதம்பரம் உள்ளிட்டோர், பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தனர். இவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் தற்போது முன்னெடுக்கப்படலாம் என தெரிகிறது. மேலும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை மத்திய அரசு ரத்து செய்தது, அடுத்த ஆண்டு தமிழகம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல், பீகார் மற்றும் கேரள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸின் பின்னடைவு, வேளாண் சட்டங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்துவது, உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் கட்சி தலைவர்களுடன் சோனியா ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகம்

தமிழகம்

இந்த கூட்டத்தில் ராகுல் காந்தியும் பங்கேற்க கூடும். அந்த வகையில் நாளை நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் மிகப்பெரிய மாற்றத்தையும், திருப்பத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால், முக்கியத்துவம் பெற்று வருகிறது.

English summary
Sonia Gandhi to meet congress dissident leaders tomorrow
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X