டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரச்சாரம் செய்யாத அம்மா.. கிரிக்கெட் விளையாடும் மகன்.. காங்கிரசில் நிழல் யுத்தம்.. சோனியா vs ராகுல்

இரண்டு மாநில சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்குள் தற்போது பெரிய நிழல் யுத்தம் நடந்து வருகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: இரண்டு மாநில சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்குள் தற்போது பெரிய நிழல் யுத்தம் நடந்து வருகிறது.

இந்தியா தற்போது அடுத்த தேர்தல் பரபரப்பிற்கு தயாராகி வருகிறது. மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் நாளை சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. வரும் 24ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இதற்காக கட்சிகள் எல்லாம் தற்போது மிக தீவிரமாக தயாராகி வருகிறது. காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் மிக தீவிரமாக தயாராகி வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி இன்னும் லோக்சபா தேர்தல் தோல்வியில் இருந்து மீண்டு வரவில்லை என்றுதான் கூற வேண்டும்.

இன்று முதல் 'டாக்டர் எடப்பாடி கே பழனிச்சாமி'.. பட்டம் வழங்குகிறது டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம்இன்று முதல் 'டாக்டர் எடப்பாடி கே பழனிச்சாமி'.. பட்டம் வழங்குகிறது டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம்

நிழல் யுத்தம்

நிழல் யுத்தம்

தற்போது காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு நிழல் யுத்தம் நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் மூத்த தலைவர்கள், இளம் தலைவர்கள் இடையே இந்த சண்டை நடந்து வருகிறது. கட்சிக்குள் யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது, தேர்தல் பணிகளை யார் கவனிப்பது என்று பெரிய குழப்பம் நிலவி வருகிறது.

ஏன் சண்டை

ஏன் சண்டை

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகியதுதான் இதற்கு காரணம். அவர் தலைவர் பதவியில் இருந்து விலகிய பின், சோனியா காந்தி தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டார். சோனியா காந்தி வந்ததும் தன்னுடைய பழைய நண்பர்களுக்கு கட்சியில் பதவி அளித்தார்.

இல்லை

இல்லை

அதே சமயம் ராகுல் காந்தி நியமித்து இருந்த பல நிர்வாகிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். இளம் தலைவர்கள் பலரின் பொறுப்புகளை சோனியா காந்தி பறித்துக் கொண்டார். இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் பிரச்சனை உருவானது. சில முக்கியமான நபர்கள் கட்சி மாறினார்கள்.

இப்போது என்ன

இப்போது என்ன

இது காங்கிரஸ் கட்சியின் ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா பிரச்சாரத்திலும் எதிரொலித்துள்ளது. இரண்டு மாநிலத்திலும் காங்கிரஸ் மிக மோசமாக தோல்வி அடைய வாய்ப்புள்ளது என்கிறார்கள். இது காங்கிரஸ் கட்சியின் பிரச்சார களத்திலும் எதிரொலித்தது. காங்கிரஸ் பிரச்சார கூட்டங்கள் எதிலும் பெரிய அளவில் கூட்டம் சேரவில்லை.

கூட்டம் இல்லை

கூட்டம் இல்லை

சோனியா, ராகுல் இருவரும் கலந்து கொண்ட பிரச்சாரத்தில் கூட கூட்டம் சேரவில்லை. தொண்டர்களும் கோஷ்டி மோதல் காரணமாக பெரிதாக தேர்தல் பணிகளை செய்யவில்லை. இதனால் ஹரியானாவில் கடைசி நேரத்தில் முக்கியமான பிரச்சாரத்தில் கலந்து கொள்ளாமல் சோனியா காந்தி வீட்டிலேயே இருந்த சம்பவமும் நிகழ்ந்தது.

ஏன் மோசம்

ஏன் மோசம்

காங்கிரஸ் பணியாளர்கள் யாரும் சரியாக வேலைசெய்யவில்லை. ராகுல் நியமித்த நிர்வாகிகள் யாரும் பேச்சை கேட்பதில்லை என்று சோனியா கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால்தான் அவர் தேர்தல் பிரச்சாரத்தை ஹரியானாவில் கடைசி நேரத்தில் ரத்து செய்தார் என்று கூறுகிறார்கள்.

ஏன் ஆர்வம்

ஏன் ஆர்வம்

இதனால் ராகுல் காந்தி அங்கு கடைசி நேரத்தில் பிரச்சாரம் செய்தார். சோனியா ஏன் பிரச்சாரத்திற்கு வரவில்லை என்று காங்கிரஸ் காரணம் தெரிவிக்கவே இல்லை. அதேபோல் ராகுல் காந்திக்கும் இந்த இரண்டு மாநில தேர்தலில் பெரிய ஆர்வம் இல்லை.

ராகுல் இல்லை

ராகுல் இல்லை

மூத்த நிர்வாகிகள் தன் பேச்சை கேட்பதில்லை என்று ராகுல் காந்தி நினைப்பதாக கூறுகிறார்கள். இதனால்தான் அவர் பிரச்சார நேரத்தில் கிரிக்கெட் எல்லாம் விளையாட சென்றார் என்கிறார்கள். ஆகவே காங்கிரஸ் கட்சிக்குள் சோனியா - ராகுல் ஆதரவாளர்கள் இடையே நிழல் யுத்தம் நடந்து வருகிறது. இது இரண்டு மாநில தேர்தலில் மிக மோசமாக எதிரொலிக்கும் என்கிறார்கள்.

English summary
Sonia vs Rahul may cause huge trouble to Congress party in 2 state elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X