ஆன் தி ஸ்பாட் ஆக்ஷன்.. "நாங்க பொறுப்பு".. நிறுத்தாமல் உதவும் சோனு சூட்.. இந்த மனசு தான் சார் கடவுள்
டெல்லி: குறை பிரசவத்தில் பிறந்த தன்னுடைய குழந்தைக்கு உதவி செய்யுமாறு, ரசிகர் ஒருவர் உதவி கேட்க, அடுத்த செகண்டே ஆதரவு கரம் நீட்டி உள்ளார் நடிகர் சோனு சூட்.
இந்த முறை கொரோனா பரவலின் 2வது அலை பயங்கரமாக மிரட்டி கொண்டிருக்கிறது.. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
எனினும் ஆஸ்பத்திரிகளில் இடம் கிடைக்காத சூழல் உருவாகி உள்ளது.. அடுத்து, ஆக்ஸிஜன் கிடைக்காத சூழல் பெருகி வருகிறது.. இப்போது சுடுகாட்டில்கூட பிணங்களை எரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்கள் தவித்து கொண்டிருக்கிறார்கள்.. ஆஸ்பத்திரிகளில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்கள்..
திணறும் தலைநகர்... யார் தான் ஆக்சிஜன் விநியோகத்திற்கு தடையாக உள்ளனர்? டெல்லி ஹைகோர்ட் பாய்ச்சல்

சோனுசூட்
இப்படிப்பட்ட சூழலில்தான், தானாக முன்வந்து உதவி செய்து கொண்டிருக்கிறார் பாலிவுட் நடிகர் சோனுசூட்.. அடுத்தவருக்கு ஒரு பிரச்சனை என்றால், முதல் ஆளாக வந்து நின்றுவிடுகிறார் நடிகர் சோனு.. யார் என்ன உதவி வேண்டுமானாலும் இவரை நம்பி கேட்கலாம்.. அவர்களிடம் முடியாது என்று சொல்ல மாட்டார்.. முடிந்தவரை அவர்களின் தேவையை நிறைவேற்றுவார். அதனால், இவரது ட்விட்டர் எந்நேரமும் பிஸியாகவே இருக்கிறது.

தொற்று பாதிப்பு
தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதும், தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டபோதும்கூட, தன்னை நம்பி உதவி கேட்டவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுகிறார்.. இப்படிதான், தனது மனிதநேயம் மிக்க செயல்களின் மூலம் மக்கள் மனதில் ஹீரோவாக உயர்ந்து நின்றுள்ளார் சோனு. இப்போது கூட தெலங்கானாவை சேர்ந்த ரசிகர் ஒருவர் தன்னுடைய குழந்தைக்கு, சோனுவிடம் ட்விட்டரில் உதவி கேட்டார்.. அந்த ட்வீட்டில் குழந்தையின் வீடியோவையும் பதிவிட்டிருந்தார்.

ஆண் குழந்தை
அந்த பதிவில், "சோனு சார்.. நான் உங்களோட மிகப்பெரிய ரசிகன்... எனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு.. ஆனால் 7 மாசத்தில் பிறந்துட்டான்.. அந்த குழந்தைக்கு வயிற்றில் தொற்று ஏற்பட்டுள்ளது... தயவுசெய்து எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்.. என்னுடைய குழந்தை கரீம் நகரில் உள்ள ஸ்டார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறது" என்று கேட்டிருந்தார்.

குறை பிரசவம்
இந்த ட்வீட்டுக்கு வழக்கம்போலவே உடனடியாக பதில் தந்தார் சோனு.. "உங்கள் குழந்தைக்கு நாங்கள் பொறுப்பு" என்றார்.. அதுமட்டுமல்ல, இன்னொரு ட்வீட்டையும் சோனு பதிவிட்டுள்ளார்.. அதில், எனக்கு கொரோனா டெஸ்ட் ரிசல்ட் நெகட்டிவ் என்று வந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.. இந்த உலகம் ஒரேடியாக அழிந்துவிடாமல், உயிரோட்டத்துடன் நகர்கிறது என்றால், சோனு சூட் போன்ற "மனித கடவுள்கள்" நடமாடி கொண்டிருப்பதால்தான்..!
தற்போது சோனு சூட் கோவிட் நெகட்டிவ் ஆகி விட்டார் என்பது சந்தோஷமான செய்தியாகும்.