டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னது தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் இவரா.. நம்பவே முடியலையே!

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார்

    டெல்லி: தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து பரபரப்பான தகவல் ஒன்று உலா வருகிறது. நம்புவதா இல்லையா என்ற குழப்பமும் கூடவே வருகிறது.

    பாஜகவின் அடுத்த தமிழகத் தலைவராக ஜி.கே.வாசன் நியமிக்கப்படலாம் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் விரைவில் பாஜகவில் இணையப் போவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

    Sources say gk vasan may join bjp soon

    பாஜக தமிழகத் தலைவராக இருக்கும் தமிழிசை சவுந்தர்ராஜனின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து பாஜகவுக்கு தமிழக தலைவராக யாரை நியமிப்பது என்று பாஜக தேசியத் தலைமை ஆலோசித்து வருகிறது. இந்த தலைமைப் பதவிக்கு பாஜகவில் தற்போது கடும் போட்டி நிலவி வருகிறது.

    அண்மையில் பாஜகவில் இணைந்து ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவரும் கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் உட்பட இன்னும் சிலர் தலைவருக்கான போட்டியில் உள்ளார்கள்.

    இந்த நிலையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் பிரமாண்டமான வெற்றியைப் பெற்ற பாஜக தமிழகத்தில் படுதோல்வி அடைந்தது. தமிழகத்தில் போட்டியிட்ட அனைவரும் படுதோல்வி அடைந்தனர். பாஜகவோடு கூட்டணி வைத்ததாலேயே அதிமுகவும் படு தோல்வி அடைந்தது என்று அதிமுகவினரும் இப்போது கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் பாஜக தலைவராக யாரை நியமிப்பது என்று அமித்ஷா யோசித்து வருகிறாராம். இப்போது போட்டியில் இருக்கும் யாரை நியமித்தாலும் பாஜகவில் கோஷ்டிப் பூசல் கன்பர்ம் என்று அமித்ஷா கருதுகிறாராம். அடுத்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதால் தலைவராக ஒரு புதிய நபரை நியமிக்கலாம் என்று அமித்ஷா கருதுகிறாராம்.

    பாஜக நிலை இப்படி இருக்க நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவோடு கூட்டணி அமைத்து போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜி.கே வாசனும் தனியாக கட்சி நடத்துவதால் பெரும் சிரமங்களை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் பாஜக தரப்பில் இருந்து ஜி.கே.வாசனுக்கு தூது அனுப்பப் பட்டுள்ளது.

    வாசன் இதுவரை பாஜகவுக்கு பிடி கொடுத்து பேசவில்லை என்றும் கூறப்படுகிறது. அதே வேளையில் டெல்லியில் மூன்று முக்கியமான பாஜக பிரமுகர்களை ஜி.கே.வாசன் சந்தித்துப் பேசியிருக்கிறார். தற்போது நடந்து வரும் பேச்சு வார்த்தை பாஜகவுக்கு சாதகமாகும் பட்சத்தில் காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந் ஒருவர் பாஜகவுக்கு தலைமைப் பொறுப்பை ஏற்கும் காட்சிகள் தமிழகத்தில் கனஜோராக நடைபெறும். அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!

    English summary
    Sources say that GK vasan may join BJP soon and he made as the TN BJP President after that.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X