டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தென்னிந்தியாவை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மோடி அணுகுகிறார்: சர்ச்சையை கிளப்பிய சசிதரூர்

Google Oneindia Tamil News

டெல்லி: தென்னிந்தியாவை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அணுகுவதாக முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சசிதரூர் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக சசிதரூர் கூறுகையில், "காங்கிரஸ் ஆட்சியில் தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்படாது என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் கட்சி இந்தியாவின் அனைத்து பகுதிக்கும் சமமான முக்கியத்துவம் அளித்து வந்தது.

பாலியல் புகார்.. தலைமை நீதிபதிக்கு எதிராக போராட திட்டம்.. உச்ச நீதிமன்றத்தை சுற்றி 144 தடை உத்தரவு!பாலியல் புகார்.. தலைமை நீதிபதிக்கு எதிராக போராட திட்டம்.. உச்ச நீதிமன்றத்தை சுற்றி 144 தடை உத்தரவு!

மோடி அரசு மனப்பான்மை

மோடி அரசு மனப்பான்மை

ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தென்னிந்தியாவை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகி வருகிறது. எனவே அதற்கு முடிவு கட்டும் வகையில், இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தென்னிந்தியா முக்கிய பங்கு வகிக்கப்போகிறது என்று நினைக்கிறேன்.

பாஜக அரசு தாக்குதல்

பாஜக அரசு தாக்குதல்

சுதந்திரத்திற்கு பின் உருவாகியுள்ள நாட்டின் கூட்டாட்சி முறைக்கு எதிராக மத்தியில் ஆளும் பாஜக அரசு. கடந்த 5 ஆண்டுகளில் பலமுறை தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்தி தேசிய மொழி

இந்தி தேசிய மொழி

மாட்டுக்கறிக்கு தடை, இந்தியை தேசிய மொழியாக்க முயற்சி போன்ற பல செயல்களின் மூலம் கலாச்சார ரீதியான தாக்குதலை பாஜக நிகழ்த்தி உள்ளது. குறிப்பாக பாஜக அமைத்த 15வது நிதிக்குழுவின் செயல்திட்ட பரிந்துரைகள் காரணமாக தென்னிந்திய மாநிலங்களின் நிதி ஆதாரம் மிகப்பெரிய அச்சுறுத்தலில் உள்ளது தடை .

மோடி அரசு புலம்பல்

மோடி அரசு புலம்பல்

கேரளாவில் உள்ள நான் எனது அனுபவத்தில் சொல்கிறேன். தென்னிந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. கடந்த முறை பாஜக, தனது செயல்பாடுகளால் 282 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் இந்தமுறை அது சாத்தியம் இல்லை. ஏனெனில் ஐந்து வருடங்கள் பாஜக அரசு வெற்றிகரமாக இயங்கினாலும், வந்துவிடதா என்று அவர்களே புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள்" இவ்வாறு கூறினார்.

English summary
lok sabha elections 2019 : cong senior leader Shashi Tharoor accuses South India getting step-motherly treatment under PM Modi government:
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X