டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தென்னிந்தியாவில் வங்கதேச பயங்கரவாதிகள் அதிக எண்ணிக்கையில் ஊடுருவல்- பகீர் தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: தென்னிந்திய நகரங்களில் வங்கதேசத்தின் ஜமாத் உல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் அதிக எண்ணிக்கையில் ஊடுருவியிருப்பதாக தேசிய புலனாய்வு ஏஜென்சியின் தலைவர் ஒய்.சி. மோடி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

டெல்லியில் பயங்கரவாத தடுப்பு அமைப்புகளின் தலைவர்களின் கூட்டத்தில் ஒய்.சி. மோடி பேசியதாவது;

South India must be concerned about JMB terrorists

நாட்டில் தற்போது மிகவும் ஆபத்தான பயங்கரவாத அமைப்பாக வங்கதேசத்தின் ஜமாத் உல் முஜாஹிதீன் உருவெடுத்திருக்கிறது. இந்த அமைப்பின் பயங்கரவாதிகள் தென்னிந்தியாவில் அதிகமாக ஊடுருவியுள்ளனர்.

கர்நாடகாவில்தான் அதிக எண்ணிக்கையில் இந்த பயங்கரவாதிகள் ஊடுருவியிருக்கின்றனர். வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து இவர்கள் தென்னிந்தியாவுக்குள் ஊடுருவி இருக்கின்றனர்.

பெங்களூரு அருகே ஹபிபுர் ரஹ்மான் என்ற பயங்கரவாதி ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். இவர் புர்த்வான் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர். கடந்த ஆண்டு முகமது ஜஹுதுல் இஸ்லாம் என்ற பயங்கரவாதி பெங்களூரு அருகே ராம்நகராவில் கைது செய்யப்பட்டார்.

என்னது சாவர்க்கருக்கு பாரத ரத்னாவா? அப்ப கோட்சேவுக்கும் கேட்பீங்களா? டி. ராஜா பாய்ச்சல்என்னது சாவர்க்கருக்கு பாரத ரத்னாவா? அப்ப கோட்சேவுக்கும் கேட்பீங்களா? டி. ராஜா பாய்ச்சல்

கேரளாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 19-ந் தேதி தொழிலாளர்களாக ஊடுருவி இருந்த 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். புத்தகயா குண்டுவெடிப்பில் தேடப்பட்டவர்கள் இருவரும். இவ்வாறு ஒய்.சி. மோடி கூறினார்.

English summary
National Investigation Agency (NIA)chief, Y C Modi said that the JMB had set up several modules in South India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X