டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தென் இந்தியாவிற்கு பரவும் வெட்டுக்கிளி தாக்குதல் அபாயம்? கர்நாடகாவிற்கும் வார்னிங்.. பரபரப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி, ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் ஏற்படக் கூடும் என்று எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    வெட்டுக்கிளி வந்தால் எப்படி தடுக்கலாம்? வேளாண்துறை விளக்கம்| Oneindia Tamil

    கிழக்கு பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களிலும் வெட்டுக்கிளி தாக்குதல் ஏற்படக் கூடும் என்று, ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரித்துள்ளது.

    South Indian state Karnataka too alerted over locusts attack

    இதேபோல, இந்தியாவில் இந்த ஆண்டு வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் ஏற்படும் பாதிப்பு கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும் என மத்திய வேளாண் அமைச்சகத்தின் வெட்டுக்கிளிகள் எச்சரிக்கை அமைப்பு கூறியுள்ளது.

    பாகிஸ்தானில் இருந்து கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதல் தொடங்கிய வெட்டுக்கிளிகள் ஊடுருவல், தற்போது ராஜஸ்தான் மாநிலத்தின், 20 மாவட்டங்களில் பரவியுள்ளன. கடந்த வருடம் 12 மாவட்டங்களில் மட்டும் பாதித்த நிலையில் இந்த ஆண்டு அதன் பரவல் அதிகமாக உள்ளது.

    மேலும், இந்த முறை வந்துள்ள வெட்டுக்கிளிகள் பல முதிராத இளம் பருவத்தில் இருப்பதால் அவை பயிர்களை அழிக்கும் விகிதம் பல மடங்கு அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.

    17-ம் நூற்றாண்டில் மதுரை மீது வட இந்தியாவில் இருந்து படையெடுத்து சர்வநாசமாக்கிய வெட்டுக் கிளிகள்! 17-ம் நூற்றாண்டில் மதுரை மீது வட இந்தியாவில் இருந்து படையெடுத்து சர்வநாசமாக்கிய வெட்டுக் கிளிகள்!

    வெட்டுக் கிளிகள் முட்டை இடுவது அதிகரித்திருப்பதால், இன்னும் இரண்டு மாத காலத்திற்கு இவற்றின் எண்ணிக்கை அதிகரித்து பாதிப்பும் உயரும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    இந்த நிலையில் ஜெய்ப்பூரில் முதல் முறையாக மத்திய வேளாண் அமைச்சகம் மூலம் வழங்கப்பட்டுள்ள ட்ரோன்கள் மூலம், விவசாய நிலத்தில் மருந்து தெளித்து வெட்டுக்கிளிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி பலன் தருவதால், மேலும் அதிகமான ட்ரோன்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    English summary
    Authorities in Delhi, Haryana, Himachal Pradesh, Telangana and Karnataka too sounded alerts Thursday to the possibility of locusts entering their territories while United Nation's Food and Agriculture Organisation (FAO) has warned that the pests could reach as far east as Bihar and Odisha in the coming weeks.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X