• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கொரோனாவை தடுப்பதில் உலகத்துக்கே எடுத்துக்காட்டாக திகழும் தென்கொரியா.. இந்தியாவுக்கு சொல்லும் பாடம்

|

டெல்லி: கொரானா வைரஸ் சோதனை செய்ய இந்தியாவில் உள்ள ஆய்வகங்கள் எண்ணிக்கை வெறும் 65து தான் உள்ளது இதை வைத்து ஒரு நாளைக்கு வெறும் 2000 பேரை மட்டுமே சோதனை செய்ய முடியும்.

  அமெரிக்காவில் கொரானாவின் நிலை என்ன?

  மற்றப்படி செய்வது எல்லாம் உடல் வெப்பத்தை சோதனை செய்வது மட்டுமே. ஆனால் நாட்டின் மக்கள் தொகை 130 கோடியாகும். எனவே கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டும் என்றால் தென்கொரியாவை இந்தியா பின்பற்றினால் சிறப்பாக இருக்கும்.

  தென்கொரியாவை பரிந்துரைக்க காரணமாக உலகின் மற்ற நாடுகளைப் போலவே தென்கொரியாவும் கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் உயிரிழப்புகள் அங்கு தான் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது மிகக்குறைவு. அதேபோல் பரவும் வேகமும் பன்மடங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

   200000 பேர் பாதிப்பு

  200000 பேர் பாதிப்பு

  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 219265 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 8968 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு (who) தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த வாரம் ஒற்றை இலக்கததில் இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போது இரட்டை இலக்கத்திற்கு மாறி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இன்று பிற்பகல் நிலவரப்படி 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

   3245 பேர் பலி

  3245 பேர் பலி

  உலகிலேயே சீனாவில் தான் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டனர். அங்கு இதுவரை 80,928, பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை 3245 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிந்துள்ளனர். அதன் அண்டை நாடான தென்கொரியா கொரேனோ வைரஸ் தொற்று என்று தெரியாமலேயே அதிவேகமாக சீனாவைப் போல்தான் மோசமான பாதிப்பை சந்தித்தது.

   8500 பேருக்கு பாதிப்பு

  8500 பேருக்கு பாதிப்பு

  கடந்த பிப்ரவரி 18 அன்று, தென் கொரியா தனது 31 வது நோயாளியை கண்டறிந்தது. அவர் தான் அந்த நாட்டின் "சூப்பர்-ஸ்ப்ரெடர்" என்று அறியப்பட்டார். ஷிஞ்சியோன்ஜி சர்ச் ஆஃப் ஜீசஸ் என்று அழைக்கப்படும் ஒரு மதக் குழுவில் வெகுஜன சபைகளில் பங்கேற்ற ஒரு நடுத்தர வயது பெண் தான் அந்த நோயாளி. வயது 31 இந்த வைரஸை விசுவாசிகளின் மற்ற உறுப்பினர்களுக்கும், தென்கிழக்கு நகரமான டேகுவில் சந்தேகத்திற்கு இடமில்லாத பிற குடியிருப்பாளர்களுக்கும் அவரை அறியாமலேயே பரப்பி விட்டார்.இதன் காரணமாக திடீரென்று, தென் கொரியாவின் கொரோனா வைரஸ் வழக்குகள் இரண்டு வார காலப்பகுதியில் 180 மடங்கு அதிகரித்தன. உச்சபட்சமாக மருத்துவ ஒரு நாளைக்கு 900 க்கும் மேற்பட்ட புதிய வழக்குகளை கண்டறிந்தது. அதாவது தென் கொரியாதான் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய கொரோனா வைரஸ் வெடித்த பகுதியாக மாறியது. அதாவது 8500 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

   தென்கொரியாவில்

  தென்கொரியாவில்

  v

   2000 பேர் குணமாகி உள்ளனர்

  2000 பேர் குணமாகி உள்ளனர்

  ஆனால் சீனாவில் நிலைமையை பார்த்து உஷார் ஆன தென்கொரியா மிக விரைவாக செயல்பட்டது. அதன் விளைவாக மோசமாக பாதிக்கப்பட்ட போதும், உலகிலேயே தென் கொரியாவில் தான் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை (99) மிக குறைவு ஆகும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோரில் ஒரு சதவீதம் பேர் தான் இதுவரை உயிரிழந்துள்ளனர். 2,038 காப்பாற்றி குணப்படுத்தி உலகிற்கே முன்னுதாராரணமாக திகழ்கிறது. 6,527 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

   பல்லாயிரம் பேர் பரிசோதனை

  பல்லாயிரம் பேர் பரிசோதனை

  இது எப்படி சாத்தியம் என்றால், 'சோதனை சோதனை சோதனை' ஆம் சந்தேகப்படக்கூடிய அத்தனை பேரையும் மிக விரைவாக சோதனை செய்தது. ஏறத்தாழ பல்லாயிரம் பேரை குறுகிய காலத்தில் சோதனை செய்தது. அதற்கான வசதிகளையும் மிக விரைவாக நாடு முழுவதும் உருவாக்கியது. இதைபற்றி சியோல் தேசிய பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணரும் பேராசிரியருமான ஹ்வாங் சியுங்-சிக் கூறுகையில், "தகவல்களை வெளிப்படையாக வெளிப்படுத்தவும் வைரஸை எதிர்த்துப் போராடவும் முடிந்ததற்காக நாங்கள் ( தென்கொரியா) உண்மையில் எங்களை வேறுபடுத்திக் கொண்டோம்.

   கடுமையாக உழைத்தோம்

  கடுமையாக உழைத்தோம்

  "நாங்கள் மக்களை காப்பாற்ற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம், மக்களை பெருமளவில் சோதனை செய்வதற்கும் தனிமைப்படுத்தல்களை நடத்துவதற்கும் நாங்கள் கடுமையாக உழைத்தோம். ஆனால் கொரோனா வைரஸ் இப்போது மட்டுமல்ல சுமார் மூன்று மாதங்களாக இங்கு உள்ளது, அமெரிக்கா அல்லது பிற ஐரோப்பிய நாடுகள் என்னென்ன தயாரிப்புகளைச் செய்தன என்பது தெளிவாகத் தெரியவில்லை."

   அதிக சோதனை மையங்கள்

  அதிக சோதனை மையங்கள்

  தென் கொரியா மற்ற நாடுகளை விட வேகமாக மாதிரி மற்றும் சோதனை செய்யும் திறனைக் கொண்டிருப்பதே வேறு ஒரு காரணமும் இல்லை. விஷயங்கள் மோசமாகிவிட்ட நேரத்தில், தற்காலிக சோதனை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் புதிதாக சேர்க்கப்பட்ட ஆலோசனை தொலைபேசி சாவடிகள் போன்றவற்றில் மூலம் நாளொன்றுக்கு 10,000 க்கும் மேற்பட்டவர்களை தென்கொரியா சோதித்தது.

   மீண்டும் அதிகரிக்கும்

  மீண்டும் அதிகரிக்கும்

  தென் கொரிய அரசு கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்தி விட்டது என்று சொல்வது கடினம். கொரியா அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்ட நாடு என்பதால், கொரோனா வைரஸ் அதிக பரவல் சக்தியுடன் திரும்புவதற்கான ஒரு பெரிய வாய்ப்பு உள்ளது, மேலும் இது தொடங்குவதற்கு ஒரு சிறிய குழு தொற்றுநோயாக கூட தோன்றக்கூடும்" என்றார். தென்கொரியா அதிக மக்களை சோதித்து விரைவாக ஒவ்வாருவரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்ததால் இன்றைக்கு உயிரிழப்புகள் பெரிதாக இல்லை. எனவே அது போல் பெரியதொரு சோதனை மைய கட்டமைப்பை உருவாக்கி உழைப்பை இந்தியா செய்ய தயாராக வேண்டியது இப்போது அவசியமாகும்.

  விருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,
  இன்றே பதிவு செய்யுங்கள்
  - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  South Korea's coronavirus lessons : Quick, easy tests; monitoring. life seems to be going on with some sense of normalcy
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more