டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லா நினா வருது தென்மேற்குப் பருவமழை ஜோரா பெய்யப்போகுது - நல்ல செய்தி சொன்ன வானிலை

லா நினா புண்ணியத்தால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எந்த தடையும் இன்றி ஜோராக கொட்டித்தீர்க்கும் என்று சர்வதேச வானிலை ஆய்வாளர்கள் கணித்திருக்கின்றனர்.

Google Oneindia Tamil News

டெல்லி: தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு கணித்தது போலவே ஜூன் 1ஆம் தேதி தொடங்கி பல மாவட்டங்களிலும் ஜோராக பெய்து வருகிறது. பல மாநிலங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. லா நினா புண்ணியத்தால் இந்த ஆண்டு பருவமழை வஞ்சனை வைக்காமல் பெய்யும் என்று கணித்திருக்கின்றனர் சர்வதேச வானிலை ஆய்வாளர்கள்.

Recommended Video

    Rain Update: SouthWest Monsoon ஜோரா பெய்யப் போகுது | La Nino

    இந்தியாவிற்கு தென்மேற்குப் பருவமழையும் வடகிழக்குப் பருவமழையும் கை கொடுக்கும். ஜூன் முதல் அக்டோபார் வரை தென்மேற்குப் பருவமழை குறையின்றி பெய்தால் அணைகள் நிரம்பி வழியும், அதேபோல வடகிழக்குப் பருவமழையும் பொய்த்துப்போகாமல் இருந்தால் உணவுதானிய உற்பத்தி குறைவில்லாது இருக்கும் விலைவாசியும் கட்டுக்குள் இருக்கும்.

    Southwest monsoon boost this year La Nina effect

    இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை சரியான காலத்தில் தொடங்கி சரியாக பெய்து வருகிறது. பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.

    மத்திய இந்தியாவில் இந்த ஆண்டு பருவமழை ஜூன் 1 முதல் ஜூன் 24 வரைக்கும் சராசரியை விட 59 சதவிகிதம் அதிக அளவு மழை பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் தென்மேற்குப் பருவமழை 33 சதவிகிதம் குறைவாக பதிவாகியிருந்தது. படிப்படியாக பருவமழை அதிகரித்தது. அணைகள் நிரம்பும் அளவிற்கு பருவமழை கொட்டித்தீர்த்தது.

    திருச்சி, திண்டுக்கல் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி திருச்சி, திண்டுக்கல் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

    இந்த ஆண்டு லா நினோ பருவமாற்றத்தினால் தென்மேற்கு பருவமழை எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக அளவில் பெய்யும் வாய்ப்பு உள்ளதாக ஆஸ்திரேலியா பீரோ ஆப் மெட்டராலஜி (The Australian Bureau of Meteorology) கணித்துள்ளது. பருவமழை பற்றிய இந்த அறிவிப்பு விவசாயிகளை உற்சாகப்படுத்தியுள்ளது.

    எல்-நினோ, லா-நினா இரண்டுமே கடலில் ஏற்படும் மாற்றங்கள்தான். ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தொடங்கும் போதே இந்த ஆண்டு எப்படி இருக்கும் எல் நினோ பற்றியும் லா நினா பற்றியும் பேசுவார்கள். ஒரு பக்கம் மழையின்றி வறட்சியும், ஒரு பக்கம் வெள்ளமும் பாதிக்கும்.

    இந்த எல் நினோவின் பிறப்பிடம் பசிபிக் பெருங்கடல், எல் நினோவின் தங்கைதான் லா நினா. உலகத்தின் தட்ப வெட்பத்தை தீர்மானிப்பது எல் நினோவும் லா நினாவும்தான். லா நினோ காலத்தில் பருவமழை கொட்டித்தீர்க்கும் சில நேரங்களில் பேரழிவும் வரும். அதே போல எல் நினோ காலத்தில் பருவமழை பெய்யாமல் பஞ்சத்தை ஏற்படுத்தி வறட்சியில் வாட வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The southwest monsoon is likely to get a huge boost as the likelihood of the La Nina phenomenon increases, which is associated with an above-normal rainfall, international forecasters say.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X