டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சமஸ்கிருதத்தில் பேசினால் சர்க்கரை நோய் வராது.. உடலில் கொழுப்பு குறையும்.. பாஜக எம்பி

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தி தெரியுமா | 13-12-2019 | Morning News | oneindia tamil

    டெல்லி: சமஸ்கிருதத்தில் பேசினால் சர்க்கரை நோய் வராது, இதயத்தில் கோளாறுகள் எதுவும் வராது என்று பாஜக எம்பி கணேஷ் சிங் நாடாளுமன்ற விவாதத்தில் தெரிவித்துள்ளார்.

    அழிந்து வரும் தொன்மையான மொழிகளில் ஒன்றான சமஸ்கிருத மொழியை வளர்க்க மத்திய அரசு அதிக ஆர்வம் காட்டி வருகிறது. சமஸ்கிருத மொழியை கற்பிக்க பல்வேறு செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    Speaking Sanskrit keeps diabetes, cholesterol at bay: says bjp mp

    சமஸ்கிருத பல்கலைக்கழங்கள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய பாஜக எம்பி கணேஷ் சிங், சமஸ்கிருத மொழியில் பேசுவதன் மூலம் சர்க்கரை நோய் வராது என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும் சமஸ்கிருத மொழியில் பேசினால் இதய கோளாறுகள் ஏற்படாது என்றும், கொழுப்பின் அளவினை தவிர்க்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

    புதிய சர்ச்சை.. பாஸ்போர்ட்டில் தாமரை சின்னம்.. மத்திய அரசு விளக்கம் புதிய சர்ச்சை.. பாஸ்போர்ட்டில் தாமரை சின்னம்.. மத்திய அரசு விளக்கம்

    அத்துடன் கம்ப்யூட்டரில் சமஸ்கிருத மொழி மூலம் மென்பொருளை வடிவமைத்தால் அதில் எந்த விதமான கோளாறுகளும் ஏற்படாது என அமெரிக்காவின் நாசா செய்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாகவும் பாஜக எம்பி கணேஷ் சிங் கூறினார்.

    English summary
    bjp mp ganesh singh said that 'Speaking Sanskrit keeps diabetes, cholesterol at bay'
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X