டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே வாரத்தில்.. இந்த 9 மாநிலங்களில் எகிறிய கொரோனா கேஸ்கள்.. வெளியானது ரிப்போர்ட்

9 மாநிலங்களில் தொற்று விகிதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த ஒரு வாரத்தில் 9 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு லேசாக உயர்ந்துள்ளது.. ஒரே வாரத்தில் கேரளாவில் 1.5 சதவீதம், மகாராஷ்டிராவில் 15 சதவீதம், தமிழ்நாட்டில் 2.8 சதவீதம் உள்பட நாடு முழுவதும் புதிய பாதிப்பு சராசரியாக 3 சதவீதம் குறைந்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தொற்று வைரஸ் பாதிப்பு இன்னும் நீங்கவில்லை.. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.73 லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

ஸ்ரீரங்கம் பகல்பத்து உற்சவம் 3 ஆம் திருநாள்: அலங்காரமாக எழுந்தருளிய நம்பெருமாளுக்கு அரையர் சேவை ஸ்ரீரங்கம் பகல்பத்து உற்சவம் 3 ஆம் திருநாள்: அலங்காரமாக எழுந்தருளிய நம்பெருமாளுக்கு அரையர் சேவை

தொற்று பாதிப்பும் 3.46 கோடியை தாண்டிவிட்டது.. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது..

 மருத்துவமனை

மருத்துவமனை

அதில், புதிதாக 8,306 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,46,41,561 ஆக உயர்ந்தாகவும் கூறப்பட்டுள்ளது. புதிதாக 211 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,73,537ஆக உயர்ந்துள்ளது.. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 98,416 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. 1,27,93,09,669 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 24,55,911 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பாதிப்பு

பாதிப்பு

இதனிடையே, இன்னொரு அறிக்கையும் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,306 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் அதிகபட்சமாக கேரளாவில் 4,450 பேர் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அந்த அறிக்கையின் சுருக்கம் இதுதான்: இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 46 லட்சத்து 41 ஆயிரத்து 561 ஆக உயர்ந்தது.

கேரளா

கேரளா

கடந்த ஒரு வாரத்தில் கேரளாவில் 1.5 சதவீதம், மகாராஷ்டிராவில் 15 சதவீதம், தமிழ்நாட்டில் 2.8 சதவீதம் உள்பட நாடு முழுவதும் புதிய பாதிப்பு சராசரியாக 3 சதவீதம் குறைந்துள்ளது. கேரளாவில் 161 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 211 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,73,537 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் கடந்த ஒரு வாரத்தில் பாதிப்பு 25 சதவீதம் அதிகரித்துள்ளது..

குஜராத்

குஜராத்

அங்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2,499 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது.. இந்த எண்ணிக்கையானது, முந்தைய வாரத்தை விட சற்று அதிகம்.. முந்தைய வாரத்தில் 2,001 பேர் அங்கு பாதிக்கப்பட்டிருந்தனர்... தெலுங்கானாவை பொறுத்தவரை, ஒரு வார பாதிப்பு 1,059-ல் இருந்து 1,329 ஆக உயர்ந்துள்ளது... டெல்லியில் ஒரு வார பாதிப்பு 200-ல் இருந்து 492 ஆகவும், குஜராத்தில் 202-ல் இருந்து 309 ஆகவும், உபியில் 50-ல் இருந்து 101 ஆகவும் உயர்ந்துள்ளது.

Recommended Video

    Omicron-க்கு எதிராக Covishield, Covaxin வேலை செய்யுமா? | Oneindia Tamil
     புள்ளிவிவரம்

    புள்ளிவிவரம்

    கோவாவில் 50 சதவீதம், சிக்கிம் மாநிலத்தில் 122 சதவீதம், ஜார்க்கண்டில் 12 சதவீதம், ஜம்மு காஷ்மீரில் 10 சதவீதம் என மொத்தம் 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா கேஸ்கள் புதிதாக பதிவாகி உள்ளதுடன், அது அதிகரித்தும் உள்ளதாக புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது.. இதையடுத்து, தடுப்பூசி உள்ளிட்ட அடுத்தடுத்த நடவடிக்கைகளில் மத்திய அரசு மேலும் தீவிரம் காட்டி வருகிறது.

    English summary
    Spike: Weekly corona cases still falling but increasing in 9 states, says Report
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X