டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்களே நல்ல செய்தி.. ரஷியாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி சோதனை.. இந்தியாவில் தொடக்கம்!

Google Oneindia Tamil News

புதுடெல்லி: இந்தியாவின் டாக்டர் ரெட்டி ஆய்வகம், ரஷியாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் இரண்டாவது, மூன்றாவது பரிசோதனையை இந்தியாவில் தொடங்கி உள்ளது.

கொரோனாவுக்கு எப்போது தடுப்பு மருந்து கிடைக்கும் என மக்கள் ஏங்கி தவித்து வரும் நிலையில் இந்த செய்தி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுளளது.

ஸ்பூட்னிக் வி தடுப்பூசி 95 சதவீதம் பாதுகாப்பானது என்றும், இதை வழங்குவதில் இந்தியாவுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று ரஷியா ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

பைஃசர்- பயோன்டெக் தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல்.. உலகில் முதல் நாடு பைஃசர்- பயோன்டெக் தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல்.. உலகில் முதல் நாடு

 ரஷியாதான் டாப்

ரஷியாதான் டாப்

உலகம் முழுவதும் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனாவுக்கு தடுப்பு வாக்சின் கண்டுபிடிக்க உலக நாடுகள் போட்டி போட்டு வருகின்றன. உலகிலேயே கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி அளித்த முதல் நாடு ரஷியா தான். ஸ்பூட்னிக் வி என அழைக்கப்படும் இந்த தடுப்பூசியை கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் உருவாக்கியது.

 பெருமிதம்

பெருமிதம்

அந்த தடுப்பூசிக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதம் இரண்டு பரிசோதனைகள் நடந்தது. இந்த தடுப்பூசி தேவையான அனைத்து சோதனைகளிலும் வெற்றி கண்டுவிட்டதாக சில மாதங்களுக்கு முன்பு விளாடிமர் புதின் தெரிவித்து இருந்தார். மகள்களில் ஒருவருக்குக் அந்த தடுப்பூசி போடப்பட்டதாகவும் அவர் கூறி இருந்தார்.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

ரஷ்ய நேரடி நிதியுதவி நிறுவனம்(ஆர்.டி.ஐ.எஃப்), இந்தியா ஹைதராபாத்தை மையமாக கொண்ட புகழ்பெற்ற மருந்து தயாரிக்கும் நிறுவனமான டாக்டர் ரெட்டி ஆய்வகம்இணைந்து இந்தியாவில் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி சோதனை செய்வதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன்பின்னர் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி சோதனையை இந்தியாவில் மேற்கொள்ள டாக்டர் ரெட்டி ஆய்வகம் இந்திய அரசின் மத்திய மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆய்வகத்திடம் அனுமதி கோரி இருந்தது.

 அனுமதி கிடைத்தது

அனுமதி கிடைத்தது

இந்தநிலையில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆய்வகத்திலிருந்து இதற்கு அனுமதி கிடைத்துள்ளதால் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் இரண்டாவது, மூன்றாவது கட்ட பரிசோதனைகள் இந்தியாவில் தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

 பாதுகாப்பு முக்கியம்

பாதுகாப்பு முக்கியம்

இது குறித்து டாக்டர் ரெட்டி ஆய்வக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் இரண்டாம், மூன்றாம் கட்ட சோதனை தொடங்கி உள்ளது. இந்த சோதனை பல மையங்களை கொண்டதாக இருக்கும். சீரற்ற கட்டுப்பாட்டு ஆய்வாக இருக்கும். பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆய்வு ஆகியவை சோதனைகளில் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

 40,000 பேர்

40,000 பேர்

சுமார் 40,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்த சோதனையில் பங்கேற்க உள்ளனர். ஸ்பூட்னிக் வி தடுப்பூசி பாதுகாப்பானது எனவும் தடுப்பூசி வழங்குவதில் இந்தியாவுக்கு முன்னுரிமை வழங்கபப்டும் என ரஷ்யா கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Dr. Reddy's Laboratory in India has started the second and third trials of the Spotnik V vaccine in Russia
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X