டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிக பலன் தரும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி.. இந்தியாவில் எப்போது கிடைக்கும்? விலை என்ன? முக்கிய தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் ஒரு டோஸ் இந்தியாவில் சுமார் 750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் எனக் கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியான நிலையில், விலை குறித்து இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை எனத் தடுப்பூசியைத் தயாரிக்கும் டாக்டர் ரெட்டீஸ் அறிவித்துள்ளது.

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா பரவலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாகத் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு வேகப்படுத்தத் தொடங்கியுள்ளது. வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் தடுப்பூசி மையங்கள் அமைத்தால்.. இலவசமாக நான் வாகனம் தருகிறேன் -ஆட்சியரிடம் கூறிய பூங்கோதை..!நீங்கள் தடுப்பூசி மையங்கள் அமைத்தால்.. இலவசமாக நான் வாகனம் தருகிறேன் -ஆட்சியரிடம் கூறிய பூங்கோதை..!

ஸ்புட்னிக் வி தடுப்பூசி

ஸ்புட்னிக் வி தடுப்பூசி

இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளுடன் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் முதலில் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் என்றும் பின்னர் இந்தியாவிலேயே டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் ஸ்புட்னிக் வி தடுப்பூசியைத் தயாரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக சுமார் 91% தடுப்பாற்றலை தருகிறது.

விலை முடிவாகவில்லை

விலை முடிவாகவில்லை

இந்நிலையில், ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் ஒரு டோஸ் இந்தியாவில் 10 டாலர்களுக்கு (750 ரூபாய்) விற்பனை செய்யப்படும் எனக் கடந்த சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது. இருப்பினும், இந்தத் தகவலை தற்போது டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் மறுத்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சர்வதேச சந்தையில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி 10 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி விலை குறித்து இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை" என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி எப்போது

இறக்குமதி எப்போது

ஸ்புட்னிக் வி தடுப்பூசி குறித்து டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.வி.பிரசாத் கூறுகையில், முதலில் இறக்குமதி செய்யப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தனியார் சந்தையில் மட்டுமே விற்பனை செய்யப்படும். சர்வதேச சந்தைக்கு ஒத்த வகையில் விலையை நிர்ணயம் செய்ய விரும்புகிறோம். எனவே, அதிகபட்சமாக 10 டாலருக்கு இறக்குமதி செய்யப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி விற்பனை செய்யப்படலாம். முதல் கட்டமாக மே மாதம் முதல் தடுப்பூசியை இறக்குமதி செய்யவுள்ளோம்.

இந்தியாவில் விலை குறையும்

இந்தியாவில் விலை குறையும்

அதேநேரம் இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் உற்பத்தி தொடங்கிவிட்டால், அதில் பாதியை ஏற்றுமதி செய்ய வேண்டும். மீதி பாதி இந்தியாவில் பயன்படுத்தப்படும். அப்போது, இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதால் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் விலை குறையும். இது தொடர்பான இறுதி விலையை வரும் காலங்களில் முடிவு செய்யவுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

English summary
Sputnik V Vaccine's price in India, Dr Reddy's Labs clarification.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X