டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஈழத் தமிழருக்கு 'மண்ணிழந்த மனிதர்கள்' என்று மனிதாபிமானம் காட்டுமா குடியுரிமை மசோதா...? வைரமுத்து

Google Oneindia Tamil News

டெல்லி: ஈழத் தமிழ் அகதிகளுக்கும் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவி சங்கர், கவிஞர் வைரமுத்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளார்.

Sri Sri Ravi Shankar requests to consider giving Indian citizenship to Eelam Tamils

லோக்சபாவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் போது திமுக எம்.பி. டி.ஆர் .பாலு, ஈழத் தமிழருக்கு இந்திய குடியுரிமை வழங்க மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். அதேபோல் மற்றொரு திமுக எம்பி தயாநிதி மாறனும் கேள்வி எழுப்பினார்.

சிவசேனாவும் ஈழத் தமிழருக்கு குடியுரிமை வழங்க கோரிக்கை விடுத்தது. தற்போது வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கரும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர், இந்தியாவில் 1 லட்சம் ஈழத் தமிழர்கள் அகதிகளாக உள்ளனர். 35 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வாரும் ஈழத் தமிழர்களுக்கும் இந்திய அரசு குடியுரிமை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் கவிஞர் வைரமுத்துவும் தமது ட்விட்டர் பக்கத்தில், இலங்கைத் தமிழ் அகதிகளை அண்டைநாட்டுக் குடிமக்களாகக் கருதாமல் 'மண்ணிழந்த மனிதர்கள்' என்று மனிதாபிமானம் காட்டுமா இந்தியக் குடியுரிமை மசோதா...? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பன்னெடுங்காலமாக இந்தியாவின் தொப்புள் கொடி உறவுகளாக இருக்கும் இலங்கைத் தமிழர்களும், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களும் இதில் விடுபட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்தச் சட்டத்திருத்தம் பொருந்தும் வகையில் அமைக்கப்பட்டால் மட்டுமே இந்தியா மதச்சார்பின்மையை, சமய நல்லிணக்கத்தைப் போற்றுகிற தேசம் என்பது உறுதியாகும். எனவே, மத்திய அரசு இப்பிரச்சினையைத் தாயுள்ளத்தோடு அணுகிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

English summary
Sri Sri Ravi Shankar tweets "I request the Government of India to consider giving citizenship to more than 1 lakh Tamil Sri Lankans who are living in this country as refugees for the last 35 years.".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X