டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

150 சிபிஐ உயர் அதிகாரிகளுக்கு பல்வேறு பயிற்சி அளித்த சாமியார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்.. பின்னணி என்ன?

Google Oneindia Tamil News

Recommended Video

    சிபிஐ உயர் அதிகாரிகளுக்கு பல்வேறு பயிற்சி அளித்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

    டெல்லி: சிபிஐ உயர் அதிகாரிகள் 150 பேருக்கு கடந்த 3 நாட்களாக சாமியார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், தனது வாழும் கலை அமைப்பு மூலம் பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறார்.

    இந்த மில்லினியம் வருடத்தில், மக்களுக்கு நிறைய பிரச்சனைகள் உள்ளது. வேலை சார்ந்த, வாழ்க்கை சார்ந்த, பணம் சார்ந்த நிறைய அழுத்தங்கள் உள்ளது. இப்படி அழுத்தங்கள் அதிகரிக்கும் போது மக்கள் தியானம் செய்ய வேண்டும் என்று பலர் வலியுறுத்துவது வழக்கம்.

    அந்த வகையில்தான் தற்போது சிபிஐ உயர் அதிகாரிகள் தியானம் உள்ளிட்ட சில பயிற்சிகளை கடந்த மூன்று நாட்களாக செய்து வருகிறார்கள். அட போங்க பாஸ், இதுல என்ன சிறப்பு இருக்கும் என்று கேட்கலாம். இது அரசு நடத்தும் விழா கிடையாது. சாமியார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், தனது வாழும் கலை அமைப்பு மூலம் இந்த பயிற்சியை வழங்கி வருகிறார்.

    [சிவகாசியில் இன்று முதல் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்.. 1 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்]

    பெரிய பிரச்சனை

    பெரிய பிரச்சனை

    தற்போது சிபிஐ அமைப்பிற்குள் பெரிய பிரச்சனை நிலவி வருகிறது. சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா சிபிஐக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்ச புகாரில் சிக்கி உள்ளார். சிபிஐ மீது சிபிஐ ரெய்டு நடத்துகிறது. இப்படி நிறைய டென்சன், டென்சன் என்று பிரச்சனைகள் சிபிஐயை சுற்றி இருப்பதால்தான் என்னவோ தற்போது சிபிஐ அதிகாரிகள் சாமியார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரிடம் பயிற்சி பெற சென்று இருக்கிறார்கள்.

    என்ன பயிற்சி

    என்ன பயிற்சி

    சாமியார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், தனது வாழும் கலை அமைப்பு மூலம் இந்த பயிற்சியை வழங்கி வருகிறார். கடந்த 9ம் தேதி இந்த பயிற்சி தொடங்கியது. கடந்த மூன்று நாட்களாக நடக்கும் இந்த பயிற்சி இன்று முடிகிறது. சிபிஐ அதிகாரிகள் மட்டும் பயிற்சி பெறும் வகையில் இதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    ஏன் இது

    ஏன் இது

    சிபிஐ அதிகாரிகள் தங்களுக்குள் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். டென்ஷன் இல்லாமல் பணியாற்ற வேண்டும். வேகமாக சிந்திக்க வேண்டும். புதிய விஷயங்களை யோசிக்க வேண்டும் என்று நிறைய விஷயங்களை மையப்படுத்தி இந்த சிறப்பு பயிற்சி, சிபிஐ அதிகாரிகளுக்கு அளிக்கப்படுகிறது என்று ரவிசங்கர் கூறியுள்ளார்.

    யார் எல்லாம்

    யார் எல்லாம்

    இதில் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சிபிஐ அலுவலகத்தில் வேலை பார்க்கும் கடைநிலை ஊழியர்கள் இங்கே வந்து பயிற்சி பெறவில்லை. 150 உயர் ரேங்க் கொண்ட சிபிஐ அதிகாரிகளுக்குத்தான் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. அதாவது இந்தியாவில் தனி அதிகாரம் கொண்ட, இந்திய அரசு மற்றும் சட்ட ஒழுங்கை காப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு பெரிய அமைப்பின் உயர் அதிகாரிகளுக்கு ஒரு சாமியார் டெல்லியில் பயிற்சி அளிக்கிறார்.

    பெரிய சர்ச்சை

    பெரிய சர்ச்சை

    அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டவுடன் பெரிய சர்ச்சை கிளம்பியது. எப்படி ஒரு சாமியார் சிபிஐ அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்க முடியும். இது மிகப்பெரிய சட்ட மீறல். சிபிஐ அதிகாரிகளிடம் தனக்கு செல்வாக்கை உருவாக்கி கொள்ளும் வகையில் ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர் இதை செய்கிறார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.

    அனுமதி எப்படி

    அனுமதி எப்படி

    இதற்கு யார் அனுமதி கொடுத்தது என்று இதுவரை யாருக்கும் தெரியாது.

    1.சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா கொடுத்தாரா, ?

    2. சிபிஐ தற்காலிக இயக்குனர், (முடிவெடுக்க அதிகாரம் இல்லாத) நாகேஸ்வர் ராவ் கொடுத்தாரா?

    3. மோடி தலைமையிலான மத்திய அரசு கொடுத்ததா? என்று பெரிய கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து சிபிஐ அமைப்பும் விளக்கம் அளிக்கவில்லை.

    ஏன் இது பிரச்சனையாகிறது

    ஏன் இது பிரச்சனையாகிறது

    இந்த விஷயம் பிரச்சனை ஆக நிறைய காரணம் இருக்கிறது. ஒரு சாமியார் இப்படி இந்தியாவின் முக்கிய அதிகாரிகள் 150 பேரை அழைத்து பயிற்சி வகுப்பு நடத்த முடியும் என்றால், பணம் இருப்பவர்கள் அதே சிபிஐ அதிகாரிங்களை அழைத்து வேறு விழா நடத்த வேண்டும், வேறு பயிற்சி அளிக்க வேண்டும் என்று கூறினால் என்ன ஆகும். குற்றவாளிகள் இதேபோல் செய்யும் வழக்கம் உருவானால் என்ன ஆகும். யார் அனுமதி அளித்தது என்று கூட தெரியாமல் இப்படி ஒரு விஷயம் நடப்பது எப்படி சரியானதாக இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    Sri Sri Ravishankar's Art of Living program with CBI officials ends today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X