டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராஜினாமால்லாம் வேண்டாம்.. காங். தலைவர் ராகுலிடம் போனில் பேசிய ஸ்டாலின்!

Google Oneindia Tamil News

Recommended Video

    காங். தலைவர் ராகுலிடம் போனில் பேசிய ஸ்டாலின்!- வீடியோ

    டெல்லி: பதவி விலக வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசியில் வலியுறுத்தியுள்ளார்.

    மக்களவை தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பதவி விலக முடிவு செய்துள்ளார். தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல்காந்தி ராஜினாமா கடிதம் கொடுத்தார்.

    ஆனால் அதனை காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்க மறுத்துவிட்டது. ஆனாலும் ராஜினாமா செய்தே தீருவேன் என விடாப்பிடியாக இருந்து வருகிறார் ராகுல்.

    காங்கிரஸ் தலைவர் ரஜினிகாந்த்.. ஆஹா அரிய வாய்ப்பு.. அவசரமாக பரிசீலிப்பாரா ராகுல் காந்தி? காங்கிரஸ் தலைவர் ரஜினிகாந்த்.. ஆஹா அரிய வாய்ப்பு.. அவசரமாக பரிசீலிப்பாரா ராகுல் காந்தி?

    போனில் பேசிய ஸ்டாலின்

    போனில் பேசிய ஸ்டாலின்

    அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ராகுல் காந்தியிடம் திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என அவர் ராகுலுக்கு வலியுறுத்தியுள்ளார்.

    மனங்களை வென்றுள்ளீர்கள்

    மனங்களை வென்றுள்ளீர்கள்

    காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் ராகுல் நீடிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தலில் தோற்றாலும் மக்களின் மனங்களை வென்றுள்ளீர்கள் என்றும் ஸ்டாலின் ராகுலிடம் கூறியதாக கூறப்படுகிறது.

    சோனியாவிடமும் பேச்சு

    சோனியாவிடமும் பேச்சு

    இதைத்தொடர்ந்து பேசிய ராகுல், தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதற்கு ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தாக கூறப்படுகிறது. ராகுலை தொடர்ந்து சோனியா காந்தியிடமும் தொலைபேசியில் ஸ்டாலின் பேசினார்.

    விடாப்பிடியாக..

    விடாப்பிடியாக..

    அப்போது சோனியாவும் தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ராகுல் ராஜினாமா விஷயத்தில் விடாபிடியாக இருந்து வரும் நிலையில் ஸ்டாலின் தொலைபேசியில் ராகுலிடம் பேசியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    DMK president Stalin spoke to Congress president Rahul through phone urged to do not resign.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X