டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

+2 தேர்வை ரத்து செய்த மாநிலங்கள்.. ஜூலை 31க்குள் ரிசல்ட் வெளியிட வேண்டும்.. உச்ச நீதிமன்றம் உத்தரவு

Google Oneindia Tamil News

டெல்லி: 12ஆம் வகுப்பு மாநில பாடத் திட்ட தேர்வுக்கான முடிவுகளை ஜூலை 31ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று பொதுத்தேர்வை ரத்து செய்த மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுவிட்டன.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்தியாவில் 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் அனுபா சஹாய் பொதுநல வழக்கு தொடுத்து இருந்தார். இந்த வழக்கு விசாரணையில் இருக்கும் போதே பல்வேறு மாநிலங்கள் 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்தது.

CAG Report: அதிமுக ஆட்சியில் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. ரூ 424 கோடி நஷ்டம்!.

ரத்து

ரத்து

இந்த நிலையில் 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏஎம் கான்வில்ஹார், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அமர்வு முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் 12ஆம் வகுப்பு மாநில பாடத் திட்ட தேர்வுக்கான முடிவுகளை ஜூலை 31ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று பொதுத்தேர்வை ரத்து செய்த மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எப்படி

எப்படி

இந்த 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்படி கணக்கிடப்படும் என்ற விவாதத்தை இன்னும் 10 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். முடிவுகள் கணக்கிடும் முறையை விவரமாக தெரிவிக்க வேண்டும். அதன்பின் ஜூலை 31க்குள் தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும்.

ஒரே மாதிரி

ஒரே மாதிரி

எல்லா மாநிலங்களும் ஒரே மாதிரியான மதிப்பெண் கணக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டிய அவசியம் கிடையாது. மாநில பாடத்திட்டங்கள் வேறு வேறாக இருப்பதாலும், தங்களுக்கு தகுந்த மதிப்பெண் கணக்கீடு முறையை பின்பற்றலாம். ஆனால் அது தொடர்பான விவரங்களை இன்னும் 10 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டனர்.

கோபம்

கோபம்

அதேபோல் 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்யாமல் அதை தொடர்ந்து நடத்த முடிவு செய்திருக்கும் ஆந்திர பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. எல்லா மாநிலங்களும் தேர்வை ரத்து செய்யும் போது ஆந்திர பிரதேசம் மட்டும் இப்படி செய்வது என்ன நியாயம், இதனால் ஒரு உயிர் போனால் கூட 1 கோடி ரூபாயை நிவாரணமாக ஆந்திர அரசு அளிக்க வேண்டும்.

 உயிர்கள்

உயிர்கள்

ஆந்திர அரசுதான் மாணவர்களின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் பொறுப்பு. டெல்டா + வகை போன்ற புதிய வகை கொரோனா பரவி வருகிறது. அப்படி இருக்கும் போது எந்த அடிப்படையில் ஆந்திர பிரதேச அரசு தேர்வு நடத்தும் முடிவை எடுத்தது என்று உச்ச நீதிமன்றம் ஆந்திர பிரதேச அரசுக்கு கேள்விக்கு எழுப்பி உள்ளது.

English summary
State Board 12th exam results should be declared before July 31 orders Supreme Court in a PIL.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X