டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாடு முழுக்க எந்த விழாக்களுக்கும் அனுமதி கிடையாது.. சித்திரையும் அதுவுமாக உத்தரவிட்ட மத்திய அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: லாக்டவுன், அமலில் இருக்கும் காலத்தில் எந்த விழாக்களுக்கும் அனுமதி அளிக்க கூடாது என்று மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தி இருக்கிறது. சித்திரை மாதம் அதிக விழாக்கள் நடைபெறும் என்ற நிலையில், இதுபோன்ற ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    இந்தியா 3வது ஸ்டேஜை எட்டிவிட்டதா? ஐசிஎம்ஆர் ரிப்போர்ட் சொல்வது என்ன?

    எந்த ஒரு சோசியல் நிகழ்வாக இருந்தாலும், நீங்கள் கண்டிப்பாக நீங்கள் அதனை அனுமதிக்க கூடாது, உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    State governments not to allow any festivals in Lockdown period

    பல மாநிலங்களில் லாக்டவுன் முழுமையாக பின்பற்றவில்லை, பொதுமக்கள் வெளியே வருவதைப் பார்க்க முடிகிறது என்று மத்திய அரசு அதிருப்தியில் உள்ளது. இந்த நிலையில் பொது விழாவிற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மீண்டும் நினைவூட்டியுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

    முதல்வர்களுடன் பிரதமர் நாளை விரிவான ஆலோசனை நடத்த இருக்கும் நிலையில், இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.

    சில பகுதிகளில் லாக்டவுனை தளர்த்தினாலும், பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்வது போன்றவற்றில் அடுத்த சில வாரங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் அல்லது தடை நீடிக்கும் என்றுதான் இதை பார்க்க வேண்டியுள்ளது.

    English summary
    The union government has advised all state governments not to allow any festivals in Lockdown period to remain in force. Such a directive has been issued as more festivals take place in the month of April.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X