• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சமுக பரவலை இனியும் மறுக்க முடியாது! காட்டிக்கொடுத்த நம்பர்.. பகீர் தகவல்

|

டெல்லி: இந்தியா கொரோனா வைரஸ் கேஸ்கள்: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் சமுதாய பரவலை கட்டத்தை அடைந்துவிட்டது என்பது குறித்த உண்மையை ஒப்புக்கொள்வதில் இன்னும் பெரிய தயக்கம் இருப்பதாகத் தோன்றினாலும், மேலும் பல மாநிலங்கள் வெளிப்படையாக மறுக்க இயலாது என்பதை உணர்ந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

கடந்த ஒரு வாரத்தில், குறைந்தது மூன்று மாநிலங்களாவது சமுதாய பரவல் நடந்து கொண்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளன.. கேரளா மிகவும் நேர்மையாக முதன்முதலாக கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டது என்பதை ஒப்புக்கொண்டது.

முதல்வர் பினராயி விஜயனே திருவனந்தபுரம் எல்லைப்பகுதியை ஒட்டிய டலோரப் பகுதிகளில் தொற்று கடுமையாக இருந்தாலும் சமூகப் பரவலுக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறினார். சில நாட்களுக்கு முன்பு, சமீபத்திய வாரங்களில் அதன் கேஸ்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்துள்ள தெலுங்கானாவும் இதே கருத்தையே சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் பட்டியல்.. விவரம்

ஐசிஎம்ஆர் கையில்

ஐசிஎம்ஆர் கையில்

இப்போது, மகாராஷ்டிரா சுகாதார செயலாளரும் ஒப்புக்கொண்டிருக்கிறார். செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'சமுதாய பரவலை மறுக்கவில்லை, ஆனால் இது குறித்து முடிவெடுப்பது மாநில அரசின் கைகளில் இல்லை என்றும், இது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் "அதிகார வரம்பில்" இருக்கிறது. நாங்கள் எல்லோரும் ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறோம்' என்றார்.

எப்போதோ தொடங்கியது

எப்போதோ தொடங்கியது

சுகாதார நிபுணர்களுக்கு சமுதாய பரவலை ஒப்புக்கொள்வதில் தயக்கமும் குழப்பமும் உள்ளதாக சுயாதீன விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை, சமுதாய பரவல் என்பது இந்தியாவுக்கு எப்போதோ வந்துவிட்டது என்பதுதான் உண்மை. அறிவியல் தொடர்பான விஷயங்களில் வெளிப்படைத்தன்மை இல்லாதது கவலைகள் அளிக்கிறது என தெரிவித்தனர்.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

மகாராஷ்டிரா அதிகாரியும் சுட்டிக்காட்டியுள்ளபடி, சமுதாய பரிமாற்றத்தை ஒப்புக்கொள்வதால் எதுவும் மாறிவிடாது. சுகாதார அதிகாரிகள், மாநில அரசாங்கங்கள், மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவ ஊழியர்கள் அல்லது பொது மக்களின் தற்போதைய பணிகளுக்கு இது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. இது பெரும்பாலும் கல்விசார் கேள்வியாகும், நாடு ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 50,000 பேருக்கு தொற்று பாதிப்பை உறுதி செய்து வருகிறது. எனவே ஒரு கட்டத்தில் வெளிப்படையான பதிலை சொல்ல வேண்டும்,

இந்தியாவில் பாதிப்பு

இந்தியாவில் பாதிப்பு

சனிக்கிழமையன்று மூன்றாவது நாளாக, நாடு முழுவதும் இருந்து 50,000 க்கும் அதிகமான தொற்று உறுதியாது. இன்றும் அதே அளவு எண்ணிக்கை இருக்கும் என கூறப்படுகிறது தற்போதைய நிலையில் நாட்டில் 14 லட்சத்து 33 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இன்னும் ஒரு சில நாளில் 15லட்சத்தை கடந்துவிடும் என தெரிகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடககா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில கொரோனா பரவல் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை தினமும் மாநிலங்களில் தொற்று உறுதி செய்யப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
India Coronavirus Cases: In the last one week, at least three states have hinted that community transmission was going on. For scientists, this is a reality that had arrived in India much earlier.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X