டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவால் இறந்தவர்களுக்கு ரூ4 லட்சம் இழப்பீடு வழங்க சாத்தியமே இல்லை- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு மாநில அரசுகளால் ரூ4 லட்சம் இழப்பீடு வழங்குவது என்பது சாத்தியமற்றது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நாடு முழுவதும் மாநில அரசுகள் ரூ4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது பொதுநலன் வழக்கு. வழக்கறிஞர்கள் ரீபக் கன்சால், கவுரவ் பன்சால் ஆகியோர் இந்த பொதுநலன் வழக்கை தொடர்ந்தனர்.

தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலைக்கு.. டெல்டா வைரஸ்தான் காரணமாம்.. குண்டை தூக்கிபோட்ட ஆய்வு முடிவு! தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலைக்கு.. டெல்டா வைரஸ்தான் காரணமாம்.. குண்டை தூக்கிபோட்ட ஆய்வு முடிவு!

183 பக்க பதில்

183 பக்க பதில்

இதனை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து மத்திய அரசு 183 பக்கங்களுடனான பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

கொரோனா- இயற்கை பேரிடர் மரணங்கள்

கொரோனா- இயற்கை பேரிடர் மரணங்கள்

அதில், இயற்கை பேரிடர்கள் என்பது குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நிகழக் கூடியது. அதற்கு இழப்பீடுகளை வழங்க இயலும். ஆனால் கொரோனா மரணங்கள் என்பது உலகம் முழுவதும் நாள்தோறும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இழப்பீடு சாத்தியம் இல்லை

இழப்பீடு சாத்தியம் இல்லை

நமது நாட்டில் இதுவரை 3.85 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர். இவ்வளவு பேருக்கும் மாநில அரசுகள் இழப்பீடு வழங்குவது என்பது சாத்தியம் இல்லாதது. அதேநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கான உதவிகள் செய்ய மத்திய அரசு தயாராகவே இருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

கொரோனா குறித்த கொள்கை முடிவுகளை மத்திய அரசுதான் மேற்கொள்ள முடியும். உச்சநீதிமன்றத்தால் இந்த கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் பதில் மனுவைத் தொடர்ந்து இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

English summary
The Centre told in Supreme Court, the States cannot give Rs4 lakh ex-gratia for each Coronavirus deaths.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X