டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிக ஆபத்து.. மகாராஷ்டிரா பயணிகளுக்கு கட்டாய சோதனை.. நவம்பருக்கு பிறகு இந்தியாவில மிகப்பெரிய ஸ்பைக்!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறதால் மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் அரசுகள் நேற்று பல்வேறு இடங்களில் கடுமையான ஊரடங்கு உத்தரவுகளை விதித்தன. மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் மகாராஷ்ராவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயம் ஆக்கி உள்ளன.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் ராஜஸ்தான் அரசு மார்ச் 21 வரை ஜோத்பூரில் 144 தடை உத்தரவை விதித்துள்ளது, அதே நேரத்தில் மகாராஷ்டிரா அரசு அமராவதி, மும்பை, நாக்பூர், புனே, பிம்ப்ரி சின்ச்வாட், நாசிக், அவுரங்காபாத், தானே, நவி மும்பை, கல்யாண்-டோம்பிவ்லி, அகோலா, யவத்மால்ட், வாவ்மால் ஆகிய மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது,.

முகமூடி அணிவது, சமூக தூரத்தை பராமரிப்பது உள்ளிட்ட கொரோனா வைரஸ் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு மகாராஷ்டிரா அரசு மக்களைக் கேட்டுள்ளது. அனைத்து மத, சமூக மற்றும் அரசியல் கூட்டங்களும் மாநிலத்தில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன. அரசியல் போராட்டங்கள் நடத்தவும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு.. மகாராஷ்டிரா, கேரளாவில் நிலைமை மோசமாகிறது இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு.. மகாராஷ்டிரா, கேரளாவில் நிலைமை மோசமாகிறது

100 பேருக்கு அனுமதி

100 பேருக்கு அனுமதி

ராஜஸ்தானில், திருமணங்கள் உட்பட அனைத்து பொதுக் கூட்டங்களுக்கும் 100 பேருக்குள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற உத்தரவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜோத்பூர் காவல்துறை பிறப்பித்த உத்தரவின்படி, அத்தியாவசிய சேவைகள் மற்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.

சோதனை கட்டாயம்

சோதனை கட்டாயம்

கர்நாடகாவின் கலாபுராகி மாவட்ட நிர்வாகம் மகாராஷ்டிராவில் இருந்து வருபவர்களுக்கு பயண வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது கலாபுராகி மாவட்டத்தில் கர்நாடக-மகாராஷ்டிரா எல்லையில் ஐந்து சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்சல்பூரா மற்றும் ஆலந்தின் எல்லை வழியாக கர்நாடகாவிற்குள் நுழையும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பயணிகள் ஆர்டி-பி.சி.ஆர் சோதனையில் கொரோனா நெகட்டிவ் என்பதற்காக சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் இருந்து வந்தால் சோதனை கட்டாயம் என்று அறிவித்துள்ளன

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

இதனிடையே இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு புதிதாக 14,199 பேருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1.10 கோடியைத் தாண்டியது, அதே நேரத்தில் ஐந்தாவது நாளிலும் செயலில் உள்ள கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 17 நாட்களுக்கு பிறகு 1.5 லட்சத்தை கடந்ததாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் மொத்த கொரோனா வைரஸ் பாதிபபு 1,10,05,850 ஆகும். 83 புதிய இறப்புகளுடன் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,56,385 ஆக அதிகரித்துள்ளது.

பெரிய பாதிப்பு

பெரிய பாதிப்பு

இந்தியா நேற்று மட்டும் 4,421 ஆக்டிவ் கேஸ்கள் அதிகரித்தன. இது நாட்டில் நவம்பர் 26 ம் தேதிக்கு பிறகு மிகப் பெரிய உச்சபட்சம் ஆகும். . இதன் மூலம், செயலில் உள்ள கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 1,50,055 ஆக அதிகரித்துள்ளது, சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேசம். ஆகிய மாநிலங்களில்பாதிப்பு அதிகமாக உள்ளது.

எவ்வளவு பாதிப்பு

எவ்வளவு பாதிப்பு

நாட்டிலேயே நேற்று அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 5210 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21லட்சத்து 6 ஆயிரத்து 94 ஆக உயர்ந்தது. தற்போது அங்கு கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 53113 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மகாராஷ்டிராவில் 19 லட்சத்து 99 ஆயிரத்து 982 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை மகாராஷ்டிராவில் 51ஆயிரத்து 806 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

English summary
three states put in place measures to screen visitors from 'high-risk' Maharashtra which has registered a significant jump in cases in the last 15 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X