டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்த ரூ.1.76 லட்சம் கோடி எங்கே போனது.. ஆர்பிஐயிடம் திருடாதீர்கள்..பரபரக்கும் காங்கிரஸின் புகார்!

மத்திய ரிசர்வ் வங்கி பணத்தை மத்திய பாஜக அரசு திருடிவிட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆர்பிஐயிடம் ரூ.1.76 லட்சம் கோடி வாங்கும் மத்திய அரசு.. வெளியாகும் பரபரப்பு குற்றச்சாட்டு

    டெல்லி: மத்திய ரிசர்வ் வங்கி பணத்தை மத்திய பாஜக அரசு திருடிவிட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.

    இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நிறைய பொருளாதார சீர்திருத்தங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த பின்பும் கூட பண மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.

    இந்த நிலையில்தான் நேற்று இரவு மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்தா தாஸ் இதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளார்.

    மாயமான பணமா? ஆர்பிஐயிடம் மத்திய அரசு ரூ.1.70 லட்சம் கோடி வாங்குவது ஏன்? அதிர வைக்கும் புகார்! மாயமான பணமா? ஆர்பிஐயிடம் மத்திய அரசு ரூ.1.70 லட்சம் கோடி வாங்குவது ஏன்? அதிர வைக்கும் புகார்!

    எப்படி பலன் அளிக்கும்

    இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செய்துள்ள டிவிட்டில், தாங்களாக உருவாக்கிய பொருளாதார பேரழிவை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் பிரதமரும் நிதி அமைச்சரும் கடுமையாக குழம்பி வருகிறார்கள். ஆர்பிஐயிடம் இருந்து பணத்தை திருடுவது எந்த வகையிலும் உங்களுக்கு உதவாது. மருந்து கடையில் பேன்ட் எய்டை திருடிவிட்டு குண்டடி காயத்திற்கு அதை ஒட்டுவது எப்படி பயன் அளிக்கும் என்று கேட்டு இருக்கிறார்.

    காங்கிரஸ் கட்சி

    இதேபோல் காங்கிரஸ் கட்சி செய்துள்ள டிவிட்டில், ஆர்பிஐ மத்திய அரசுக்கு கொடுக்கும் 1.76 லட்சம் கோடி ரூபாய் பணம் கடந்த மத்திய பட்ஜெட்டில் காணாமல் போன அதே பணத்திற்கு இணையாக இருக்கிறது. அப்படி என்றால் அந்த பணம் எங்கே சென்றது. பட்ஜெட்டில் இருந்து அந்த பணம் எங்கே காணாமல் போனது. ஆர்பிஐ அமைப்பை இப்படி திருடுவது நம்முடைய பொருளாதாரத்தை மேலும் மோசமாக்கும், வங்கிகளின் கடன் கொடுக்கும் திறனும் குறையும் என்று கூறியுள்ளது.

    மிக மோசம்

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரன்தீப் சிங் சுர்ஜ்வாலா இதுகுறித்து செய்துள்ள டிவிட்டில், ஆர்பிஐ பணத்தை அரசு ஏன் கேட்கிறது. மிக மிக மோசமான பொருளாதார சூழ்நிலையிலும், போர் ஏற்படும் போதும் மட்டுமே இப்படி பணம் கேட்கப்படும். தற்போது தான் செய்த பொருளாதார தவறுகளை ஈடுகட்ட பாஜக அந்த பணத்தை வாங்கியுள்ளது.. ஆர்பிஐ அதன் நம்பகதன்மையை இழந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

    இப்போது

    முதலில் முன்னாள் ஆர்பிஐ கவர்னர்கள் ரகுராம் ராஜனும், ஊர்ஜித் பட்டேலும் மத்திய அரசு பணம் கேட்ட போது அதை தீவிரமாக மறுத்து வந்தனர். அவர்கள் நீக்கப்பட்டு அதன்பின் எம்ஏ வரலாறு படித்த சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டார். தற்போது அவர் தனது பணியை செய்துவிட்டார், என்று மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் டிவிட் செய்துள்ளார்.

    English summary
    "Stealing From RBI Won't help and work" says Rahul Gandhi and Congress on money payout
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X