டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்டெர்லைட் மூடல்: வேதாந்தாவின் அப்பீல் மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை

Google Oneindia Tamil News

டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு இழுத்து மூடியது செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா குழுமம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று (ஆக.31) விசாரணை நடைபெறுகிறது.

வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் செயல்பட்டு வந்தது. அப்பகுதியில் சுற்றுச் சூழலை நாசமாக்கியதால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு வலுத்தது.

Sterlite Case: SC to hear Vedantas appeal on Monday

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்களில் உச்சகட்டமாக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடி சீல் வைத்தத.

இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடிய தமிழக அரசின் உத்தரவு செல்லும் என தீர்ப்பளித்தது.

அன்லாக் 4.0: இ பாஸ் தேவையில்லை.. முழு லாக்டவுன் கூடாது.. மத்திய அரசின் முழு அறிக்கை இதோ!அன்லாக் 4.0: இ பாஸ் தேவையில்லை.. முழு லாக்டவுன் கூடாது.. மத்திய அரசின் முழு அறிக்கை இதோ!

இத்தீர்ப்புக்கு எதிராக வேதாந்தா குழுமம் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த விசாரணையின் போது தங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என தமிழக அரசு, மதிமுக பொதுச்செயலர் வைகோ உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவையும் தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் வேதாந்தா குழுமத்தின் அப்பீல் மனு மீதான விசாரணை திங்கள்கிழமையன்று நடைபெற உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், நவீன் சின்கா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரிக்கிறது. வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இந்த விசாரணை நடைபெற உள்ளது.

English summary
The Supreme Court will hear on Monday Vedanta's appeal against Madras High refusal to allow reopene of Tuticorin Sterlite Copper plant.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X