டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ!

உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக வந்த தீர்ப்பிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் மிக முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டெர்லைட் தீர்ப்பால் மகிழ்ச்சியில் தூத்துக்குடி மக்கள்!- வீடியோ

    டெல்லி: ஸ்டெர்லைட் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வைகோ வாதிட்ட அந்த 45 நிமிடம்தான், இந்த வழக்கின் தீர்ப்பையே மொத்தமாக புரட்டிப்போட்டு இருக்கிறது.

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளிக்க முடியாது, தமிழக அரசின் முடிவு சரிதான், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இந்த தீர்ப்பிற்கு பலரும் ஆதரவு அளித்து இருக்கின்றனர்.

    இந்த வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாதிட்டது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்றம் மட்டுமில்லாமல் தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் வைகோ இந்த வழக்கில் தீவிரமாக வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மூடல்

    மூடல்

    தூத்துக்குடியில் கடும் எதிர்ப்பிற்கு இடையில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை கடந்த மே 28-ம் தேதி தமிழக அரசால் மூடப்பட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் ஒரு மனுதாரராக வைகோ தரப்பும் வாதம் செய்தது. பல முக்கிய ஆதாரங்களை வைகோ தரப்பு இதில் அளித்தது.

    ஆனால் தீர்ப்பு

    ஆனால் தீர்ப்பு

    ஆனால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்த இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 15-ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வைகோவும் இன்னொரு மனுதாரராக மனுதாக்கல் செய்தார்.

    மிக சுவாரசியம்

    மிக சுவாரசியம்

    இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாரராக வைகோ சேர்த்துக் கொள்ளப்பட்டதே சுவாரசியமான விஷயம் ஆகும். உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹிங்க்டன் பாலி நாரிமன், வைகோவை இதில் மனுதாரராக சேர்ந்து கொண்டது ஒரு சுவாரசியமான நிகழ்வாகும். வைகோவின் மனுவை பார்த்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹிங்க்டன் பாலி நாரிமன் வைகோவை பார்த்து சில கேள்விகளை எழுப்பினார். அதில்,

    நீதிபதி ரோஹிங்க்டன்: நீங்கள் யார்?

    வைகோ: நான் வைகோ.

    நீதிபதி ரோஹிங்க்டன்: நான் அதை கேட்கவில்லை, இங்கே நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன்.

    வைகோ: ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மனுதாக்கல் செய்துள்ளேன்.

    நீதிபதி ரோஹிங்க்டன்: சரி, உங்களுக்காக யார் வாதிட போவது.

    வைகோ: நான்தான் இதில் மனுதாரர், எனக்காக நானே வாதாட போகிறேன், என்று வைகோ கூறினார். அதன்பின் வைகோவின் மனுவும் நேரடியாக, உடனடியாக இதில் ஒன்றாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.

    என்ன நடக்க இருந்தது

    என்ன நடக்க இருந்தது

    இந்த வழக்கின் விசாரணையின் போது, வைகோ வாதம் வருவதற்கு முன்பே உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக பேசியது. ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு அளிக்க வேண்டும். ஆலைக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். பராமரிப்பு பணிகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. இதனால் கடைசியில் தீர்ப்பும் கூட ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக வரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

    வைகோ கோபம்

    வைகோ கோபம்

    ஆனால் நீதிமன்றத்தில் அப்போதே வைகோ கோபமாக எழுந்து பேசினார், இது தவறான முடிவு. இதை ஏற்க முடியாது. நான் இன்னும் என்னுடைய தரப்பு வாதங்களை வைக்கவில்லை. நான் பேசிய பின் இந்த முடிவை எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு 45 நிமிடம் பேச அனுமதி வேண்டும் என்றார். இதனால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டு, வைகோ பேச இன்னொரு நாள் அனுமதி அளிக்கப்பட்டது. ஸ்டெர்லைட்டிற்கு மின் இணைப்பு அளிக்கும் உத்தரவும் நிறுத்தி வைக்கப்பட்டது.

    வைகோ 45 நிமிடம்

    வைகோ 45 நிமிடம்

    அதன்பின் வைகோ செய்த வாதம்தான் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடாமல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விசாரணையில் சரியாக அவர் சொன்னது போலவே 45 நிமிடங்கள் பேசினார். அதில் அவர் பேசிய சில விஷயங்கள்,

    • திருப்பூர் சாயப்பட்டறை வழக்கு, நொய்யல் ஆறு வழக்கு, வேலூர் தோல் தொழிற்சாலை வழக்குகளை எடுத்துக்காட்டாக கூறினார்.
    • நீர்நிலைகள் மாசாவதை ஆதாரங்களுடன் சமர்பித்தார்.
    • மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எதை எல்லாம் கருத்தில் கொள்ளவில்லை என்பதை பட்டியலிட்டார்.
    • விசாரணை கமிட்டி அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அனுமதி கிடையாது. ஆலை குறித்து விசாரணை ஆணையம் வெளியிட்ட அறிக்கையை ஏற்க கூடாது, என்றார்.
    • தமிழக அரசு இதில் முக்கிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று கூறினார்.
    • இப்படி 20க்கும் மேற்பட்ட புகார்களை அந்த 45 நிமிடம் வைகோ பட்டியலிட்டார்.

    பெரிய டிவிஸ்ட்

    பெரிய டிவிஸ்ட்

    வைகோவின் வாதத்தை கேட்ட நீதிபதிகள் அதிர்ந்து போனார்கள். அதன்பின்தான் வழக்கில் திருப்பம் வந்ததே. அதன்பின் நீதிபதிகள் ஸ்டெர்லைட் தரப்பிடம் சரமாரி கேள்விகளை எழுப்பினார்கள். தற்போது அந்த 45 நிமிட வாதத்தின் விளைவாக மொத்த தீர்ப்பே ஸ்டெர்லைட்டிற்கு எதிராக வந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Sterlite verdict: This is how MDMK leader Vaiko did a massive twist the case against the factory.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X