டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'நாட்டுக்கு எதிராக சதி செய்யும் யூடியூப் சேனல்கள் முடக்கப்படும்'.. மத்திய அமைச்சர் அதிரடி வார்னிங்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவுக்கு எதிராக சதி செய்பவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார். இணையத்தில் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருபவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தனிமையில் விதவை பெண்.. 3 முறை அபார்ஷன்.. கொதித்தெழுந்து நடத்திய தர்ணா.. எகிறி தப்பிய இளைஞர்..!தனிமையில் விதவை பெண்.. 3 முறை அபார்ஷன்.. கொதித்தெழுந்து நடத்திய தர்ணா.. எகிறி தப்பிய இளைஞர்..!

கடந்த டிசம்பர் மாதம் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை மத்திய அரசு முடக்கியது. பாகிஸ்தானில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்ட தவறான பிரச்சாரங்களை இந்த யூடியூப் சேனல்கள் மற்றும் இணையதளங்களில் பரப்பி வருவது கண்டறியப்பட்டது

மத்திய அரசுக்கு எதிரான யூடியூப் சேனல்கள்

மத்திய அரசுக்கு எதிரான யூடியூப் சேனல்கள்

காஷ்மீர் விவகாரம், விவசாயிகள் போராட்டம், ராமர் கோவில், உள்பட இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து பொய்யான தகவல்களை பதிவிட்டு வந்ததும், இந்தியாவில் உள்ள சிறுபான்மை மதத்தினரை மத்திய அரசுக்கு எதிராக தூண்டி விட முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் பேரிலேயே மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் இந்த நடவடிக்கை எடுத்தது.

 20 சேனல்கள் முடக்கம்

20 சேனல்கள் முடக்கம்

தி பஞ்ச் லைன், இன்டர்நேஷனல் வெப் நியூஸ், கல்சா டிவி மற்றும் தி நேக்கட் ட்ரூத், 48 செய்திகள், பிக்சன்ஸ், ஹிஸ்டாரிக்கல் ஃபேக்ட்ஸ், பஞ்சாப் வைரல், நயா பாகிஸ்தான் குளோபல், கவர் ஸ்டோரி, கோ குளோபல்,
என lமுடக்கப்பட்ட 20 யூ-டியூப் சேனல்கள் சுமார் 50 கோடி பார்வையாளர்கள் கொண்டவை ஆகும். இந்தியா தொடர்பான பல்வேறு முக்கிய விஷயங்களைப் பற்றி போலியான செய்திகளை கொடுத்து வந்துள்ளது.

மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர்

இந்த நிலையில் நாட்டிற்கு எதிராக சதி செய்யும் நபர்கள் மீது அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதால் யூடியூப் சேனல்கள், இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Char Dham தேவை..BrahMos Missile-ஐ China Border-க்கு கொண்டு செல்ல வேண்டும்-Govt
     நடவடிக்கை எடுக்கப்படும்

    நடவடிக்கை எடுக்கப்படும்

    யூடியூப் நிறுவனமே முன் வந்து அவர்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்தது. எதிர்காலத்திலும், இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவது, பொய்களைப் பரப்புவது மற்றும் சமூகத்தை பிளவுபடுத்துவது போன்று செயல்படும் எந்தவொரு யூடியூப் சேனல்களும், இணையதளங்களும் முடக்க, தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார்.

    English summary
    Union Information and Broadcasting Minister Anurag Thakur has said that stern action will be taken against those who conspire against India. The union Government is taking action against those who are working against India on the internet
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X