டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடியின் பிரச்சாரம் எதிரொலி.. கொதித்தெழுந்த முன்னாள் ராணுவ வீரர்கள்.. குடியரசுத் தலைவருக்கு கடிதம்

தேர்தல் பிரச்சாரத்தில் பாதுகாப்பு படையின் தாக்குதல்கள், சின்னங்கள், புகைப்படங்களை பயன்படுத்த கூடாது என்று 150 முன்னாள் பாதுகாப்பு படை வீரர்கள் இந்திய குடியரசுத் தலைவருக்கு அவசர கடிதம் எழுதி இருக்கிறார

Google Oneindia Tamil News

Recommended Video

    Stop Politicize Army men!- மோடி பிரச்சாரம் எதிரொலி.. கொதித்தெழுந்த முன்னாள் ராணுவ வீரர்கள்- வீடியோ

    தேர்தல் பிரச்சாரத்தில் பாதுகாப்பு படையின் தாக்குதல்கள், சின்னங்கள், புகைப்படங்களை பயன்படுத்த கூடாது என்று 150 முன்னாள் பாதுகாப்பு படை வீரர்கள் இந்திய குடியரசுத் தலைவருக்கு அவசர கடிதம் எழுதி இருக்கிறார்கள்.

    டெல்லி: பாதுகாப்பு படையின் தாக்குதல்கள், சின்னங்கள், புகைப்படங்களை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்த கூடாது என்று 150 முன்னாள் பாதுகாப்பு படை வீரர்கள் இந்திய குடியரசுத் தலைவருக்கு அவசர கடிதம் எழுதி இருக்கிறார்கள். முன்னாள் பாதுகாப்பு படை வீரர்கள் இந்திய குடியரசுத் தலைவருக்கு இப்படி அவசர கடிதம் எழுதுவது இதுவே முதல்முறையாகும்.

    கடந்த ஒரு மாதமாக பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர் லோக்சபா தேர்தலுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் ராணுவ வீரர்கள், ராணுவம் குறித்து பிரச்சாரத்தில் பேச தேர்தல் ஆணையம் தடை விதித்து இருந்தது.

    புல்வாமா தாக்குதல் குறித்து பாஜக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் போஸ்டர்களை ஒட்டி வந்ததால் தேர்தல் ஆணையம் இந்த தடையை விதித்தது.

    ஆமா நான் அப்படித்தான்.. ஆனால் கீழ்த்தரமாக பேசும் அளவுக்கு கிடையாது.. தமிழிசையின் செருப்படி பதில்ஆமா நான் அப்படித்தான்.. ஆனால் கீழ்த்தரமாக பேசும் அளவுக்கு கிடையாது.. தமிழிசையின் செருப்படி பதில்

    ஆனால் மோடி

    ஆனால் மோடி

    ஆனால் பிரதமர் மோடி இந்த தடையை மீறி ராணுவம் குறித்து பிரச்சாரத்தில் பேசினார். பிரதமர் மோடி மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த போது ''நான் ஒரு விஷயம்தான் கேட்க விரும்புகிறேன். முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் உங்கள் வாக்குகளை பாலக்கோட் தாக்குதலுக்காக சமர்ப்பணம் செய்யுங்கள். அங்கு தாக்குதல் நடத்திய நம் படைக்காக உங்கள் வாக்குகளை அளியுங்கள். புல்வாமாவில் இறந்த நமது வீரர்களுக்காக உங்கள் வாக்குகளை சமர்ப்பணம் செய்யுங்கள். '' என்று குறிப்பிட்டார்.

    மோடி ராணுவ சேனா

    மோடி ராணுவ சேனா

    அதேபோல் டெல்லி பிரச்சாரத்தில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசும் போது, தீவிரவாதிகளுக்கு காங்கிரஸ் கட்சி பிரியாணி கொடுத்தது. அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது. ஆனால் மோடியின் சேனையான ராணுவம் அப்படி இல்லை. மோடியின் சேனை தீவிரவாதிகளுக்கு குண்டுகளையும், தோட்டாக்களையும் அளித்தது. மோடியின் சேனை தீவிரவாத முகாம்களை அழித்தது'' என்று ராணுவத்தை மோடியின் சேனா என்று குறிப்பிட்டார்.

    பெரிய கண்டனம்

    பெரிய கண்டனம்

    இவர்கள் இருவரும் இப்படி பேசியது பெரிய எதிர்ப்புகளை கிளப்பியது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகாரும் அளிக்கப்பட்டு இருக்கிறது. தேர்தலுக்காக ராணுவத்தை பகடை காய் போல இவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியும் குற்றச்சாட்டு வைத்து இருந்தது.

    என்ன கடிதம்

    என்ன கடிதம்

    இந்த நிலையில்தான் தற்போது முன்னாள் ராணுவ வீரர்கள் 150 பேர் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு முக்கிய கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர். முன்னாள் பாதுகாப்பு படை வீரர்களின் குழுவில் இருந்து எங்களின் உச்ச தளபதிக்கு கடிதம் என்று தலைப்பிட்டு அவர்கள் இந்த கடிதத்தை எழுதி இருக்கிறார்கள்.

    முக்கியமான நபர்கள்

    முக்கியமான நபர்கள்

    மொத்தம் 150 முன்னாள் கடற்படை, தரைப்படை, விமானப்படை வீரர்கள் இந்த கடிதத்தை எழுதி இருக்கிறார்கள். இதில் முன்னாள் ராணுவ, கடற்படை, விமானப்படை தளபதிகளும் அடக்கம். முன்னாள் ராணுவ தளபதிகளான சுனித் பிரான்சிஸ், ஷங்கர் ராய் சவுத்திரி, தீபக் கப்பூர், கடற்படை முன்னாள் தளபதிகள் லட்சுமி நாராயணன் ராமதாஸ், விஷ்ணு பகவத், சுரேஷ் மேத்தா, விமானப்படை முன்னாள் தளபதி என்சி சூரி ஆகியோர் இதில் கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.

    கடும் கோபம்

    கடும் கோபம்

    இந்த கடிதத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ராணுவம் குறித்து பேசுவதற்கு முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதில், முறையற்ற, கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் ராணுவ நடவடிக்கைகளை அரசியல் காரணங்களுக்காக அரசியல் தலைவர்கள் பயன்படுத்துகிறார்கள். எல்லை தாண்டி நடத்திய தாக்குதல் குறித்து பிரச்சாரத்தில் பேசுகிறார்கள். மோடியின் சேனா என்று ராணுவத்தை குறிப்பிடுகிறார்கள். இதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

    மிக மோசம்

    மிக மோசம்

    அதேபோல் ராணுவத்தின் புகைப்படத்தை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்துகிறீர்கள். மிலிட்டரி உடை அணிந்து தேர்தல் பிரச்சாரம் செய்ய வருகிறார்கள். விமானப்படை விமானி அபிநந்தன் புகைப்படத்தை கூட பிரச்சாரத்தில் பயன்படுத்துகிறார்கள். இதை கண்டிப்பாக ஏற்க முடியாது, என்றுள்ளனர்.

    என்ன கோரிக்கை

    என்ன கோரிக்கை

    மேலும், இதனால் உடனடியாக குடியரசுத்தலைவர் வேகமாக செயல்பட்டு அரசியல் பிரச்சாரங்களில் ராணுவத்தின் பெயரை, புகைப்படங்களை, தாக்குதல்களை பயன்படுத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக உடனடியாக குடியரசுத்தலைவர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அவர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

    பெரிய பரபரப்பு

    பெரிய பரபரப்பு

    சில நாட்களுக்கு முன் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தலைமை நீதிபதிக்கு எதிராகவே பேட்டி அளித்த சம்பவம் முதல்முறையாக நடைபெற்றது. இந்தநிலையில் தற்போது முதல்முறையாக முன்னாள் பாதுகாப்பு படை வீரர்கள் இப்படி குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதி இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Stop politicize Army men attacks: Over 150 Veterans, Including 8 Service Chiefs, Write to President.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X