டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 ஞாயிற்றுக்கிழமைகள்.. 3 பல்கலைகளில் ரத்த வெள்ளம்.. அப்போது போலீஸ்.. இப்போது முகமூடி நபர்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தி தெரியுமா | 06-01-2020 | Morning News | oneindia tamil

    டெல்லி: இந்தியாவில் 3 முக்கிய பல்கலைக்கழகங்களில் 2 ஞாயிற்றுக்கிழமைகளாக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வளாகம் முழுவதும் ரத்த ஆறு ஓடுகிறது.

    நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை அமைதியான முறையில் தெரிவித்து வருகின்றனர்.

    ஆனால் இந்த போராட்டத்தை தடுக்கும் விதமாக மர்மநபர்கள் சிலர் மாணவர்கள் பெயரில் உள்ளே புகுந்து வன்முறையை தூண்டிவிடுகின்றனர். அதன்படி 2 ஞாயிற்றுக்கிழமைகள், 3 பிரதான பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர்.

    வேண்டாம்.. விட்டுடுங்க.. கெஞ்சிய மாணவிகள்.. துரத்தி துரத்தி நடத்தப்பட்ட தாக்குதல்.. ஜேஎன்யூ கொடூரம்!வேண்டாம்.. விட்டுடுங்க.. கெஞ்சிய மாணவிகள்.. துரத்தி துரத்தி நடத்தப்பட்ட தாக்குதல்.. ஜேஎன்யூ கொடூரம்!

    மாணவர்கள்

    மாணவர்கள்

    முதல் முறையாக டிசம்பர் 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தினுள் போலீஸார் நுழைந்து பாதுகாப்பு படையினர் மீது கல்வீசுவோர், நூலகங்களில் படிப்போர் என வித்தியாசம் இல்லாமல் மாணவர்களை போலீஸார் தாக்கினர். இதில் பலர் காயமடைந்தனர்.

    வழக்கு பதிவு

    வழக்கு பதிவு

    அதே வேளையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    தாக்குதல்

    தாக்குதல்

    இந்த இரு தாக்குதல் சம்பவங்களிலும் இடது சாரி மாணவர்களும் வலது சாரி மாணவர் அமைப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி கொண்டனர். இந்த நிலையில் இந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது நேற்றைய தினம் ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    பல்கலைக்கழகம்

    பல்கலைக்கழகம்

    கடந்த தாக்குதல்களில் போலீஸார் மாணவர்களை தாக்கினர். ஆனால் நேற்றைய தாக்குதல்களில் வித்தியாசமான முறையில் முகமூடி அணிந்தவர்கள் மாணவர்களை தாக்கினர். நேற்றைய தினம் இரவு 9.30 மணிக்கு மர்ம நபர்கள் முகமூடி அணிந்து கொண்டு பல்கலைக்கழகத்தினுள் நுழைந்து மாணவர்களை சரமாரியாக தாக்கினர், இதனால் பல்கலைக்கழகம் முழுவதும் ரத்தம் சிதறி கிடந்தது.

    மாணவர்கள் மீதான தாக்குதல்

    மாணவர்கள் மீதான தாக்குதல்

    இந்த சூழல் இரவு 10.15 மணிக்கு இயல்பு நிலைக்கு திரும்பியது. கடந்த இரு ஞாயிற்றுக்கிழமைகளில் 3 பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதல் சம்பவங்களால் பல்கலையில் ரத்தம் கிடந்தது. மாணவர்கள் வருங்கால இந்தியா என்கிறோம். ஆனால் நல்ல நிர்வாகிகள், கொள்ளை உருவாக்குபவர்கள், மக்கள் பிரதிநிதிகள், நாட்டை ஆள்பவர்களை உருவாக்கும் முக்கிய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் மீதான தாக்குதல் இந்தியாவின் எதிர்காலத்தின் மீதான தாக்குதலாகவே கருதப்படுகிறது.

    English summary
    Blood in all the campuses, 2 sundays, students in 3 premier universities attacked by police and masked men.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X