டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முட்டாள்தனமான ஆலோசனை இது.. வியப்பாக இருக்கிறது.. ப.சிதம்பரம் காட்டம்!

Google Oneindia Tamil News

டெல்லி: சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை குறைக்க அரசு எடுத்த முடிவை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான பி.சிதம்பரம் இது "முட்டாள்த்தனமான ஆலோசனையின்" அடிப்படையில் எடுக்கப்பட்ட தவறான நடவடிக்கை என்று கூறினார்.

Recommended Video

    நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவை ஒழிப்போம்.. அமைச்கர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்..

    உடனடியாக அரசு தனது முடிவை திரும்பப் பெற வேண்டும் என ப.சிதம்பரம் கோரிக்கைவிடுத்தார்.

    Stupid advice,’ says Chidambaram on interest rate cut

    ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 2020 ஆம் ஆண்டிற்கான சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசு 70 குறைத்து, 140 அடிப்படை புள்ளிகளாக மாற்றியது.

    வருங்கால வைப்பு நிதி (பிஎப்) வட்டி விகிதங்களை 80 பிபிஎஸ் குறைத்து 7.1 சதவீதமாகவும், கிசான் விகாஸ் பத்திரங்களுக்கு 70 பிபிஎஸ் குறைத்து 6.9 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது. பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ருத்தி திட்டத்திற்கான வட்டி, 0.8% குறைக்கப்பட்டு, இப்போது 7.6% என்ற விகிதத்தில் நிர்ணயிக்கப்பட்டது.

    பசியால் வாடும் குழந்தைகளையும் ஏழை தொழிலாளர்களையும் மோடி அரசு கைவிட்டுவிட்டதா? ப. சிதம்பரம் பசியால் வாடும் குழந்தைகளையும் ஏழை தொழிலாளர்களையும் மோடி அரசு கைவிட்டுவிட்டதா? ப. சிதம்பரம்

    இந்த நிலையில் ப.சிதம்பரம் வெளியிட்ட அடுத்தடுத்த ட்வீட்டுகளில் கூறியுள்ளதாவது: சில நேரங்களில் அரசு முட்டாள்தனமான ஆலோசனையின் பேரில் செயல்படுகிறது என்பதை நான் அறிவேன், ஆனால் இந்த அறிவுரை எவ்வளவு முட்டாள்தனமாக இருக்கிறது என்று நினைத்து நான் வியப்படைகிறேன்!

    கடுமையான துன்பம் மற்றும் வருமானம் குறித்த நிச்சயமற்ற காலங்களில், மக்கள் தங்கள் சேமிப்பின் வட்டி வருமானத்தை சார்ந்து இருக்கிறார்கள். எனவே, அரசு, உடனடியாக மறுபரிசீலனை செய்து ஜூன் 30 வரை பழைய வட்டி விகிதங்களை பராமரிக்க வேண்டும்.

    பிபிஎஃப் மற்றும் சிறு சேமிப்புக்கான வட்டி வீதத்தை குறைப்பது தொழில்நுட்ப ரீதியாக சரியானதாக இருக்கும்போது, ​​அவ்வாறு செய்வதற்கு, இது முற்றிலும் தவறான நேரம்.

    என் பார்வையில், நாம் இனி வளர்ச்சி பற்றி கவலைப்படக்கூடாது. எந்த விலை கொடுத்தாவது, மக்களின் உயிரைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். மார்ச் 25ம் தேதி, நிதி பேக்கேஜ் அறிவிக்கப்பட்ட பிறகு, அரசு அடுத்ததாக ஒரு நிதி பேக்கேஜை அறிவித்திருக்க வேண்டும். இன்னும் அதை அறிவிக்கவில்லை என்பதை நினைவூட்டுகிறேன். இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    English summary
    “I know that sometimes the government acts on stupid advice, but I am amazed how stupid this advice was. While reducing the interest rate on PPF and small savings may be technically correct, it is absolutely the wrong time to do so,” P. Chidambaram tweeted.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X