டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2,300 கி.மீ. தூரம் கடலடியில் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் அந்தமானுக்கு இனி 4ஜி இன்டர்நெட் ஈஸி

சென்னையையும், அந்தமான் போர்ட்பிளேரையும் கடல்வழியாய் இணைக்கும் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த கேபிள், சென்னையையும், போர்ட் பிளேரையும், சுவராஜ் தீவு, லிட்டில் அந்தமான

Google Oneindia Tamil News

டெல்லி: சென்னையையும், அந்தமான் போர்ட்பிளேரையும் கடல்வழியாய் இணைக்கும் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த கேபிள், சென்னையையும், போர்ட் பிளேரையும், சுவராஜ் தீவு, லிட்டில் அந்தமான், கார்நிக்கோபார்,

Recommended Video

    Chennai to Andaman கடலடியில் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் | oneindia

    கமோர்ட்டா, கிரேட் நிக்கோபார், லாங் தீவு, ரங்கத் தீவுகளையும் இணைக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் சென்னை மற்றும் போர்ட் பிளேயருக்கு இடையில் வினாடிக்கு 2x200 ஜிகாபைட் ஜிபிபிஎஸ் அலைவரிசையையும், போர்ட் பிளேயருக்கும் பிற தீவுகளுக்கும் இடையில் 2x100 ஜிபிபிஎஸ் வேகத்தில் இணைப்புகள் கிடைக்கும்

    Submarine optical fibre facility will bring lot of benefits to Andaman

    இதன்மூலம், அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு நாட்டின் பிற பகுதிகளைப்போன்று செல்போன், லேண்ட்லைன் தொலைபேசி சேவைகள் கிடைக்கும்.
    இந்த நீர்மூழ்கி கேபிள் திட்டத்துக்கு 2018ஆம் ஆண்டு, டிசம்பர் 30ஆம் தேதி போர்ட்பிளேரில் வைத்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து 2,300 கி.மீ. தொலைவுக்கு ரூ.1,224 கோடியில் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் பதிக்கப்பட்டுள்ளது.

    இன்று இந்த திட்டத்தை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். இதையொட்டி அந்தமானில் உள்ள பாஜக தொண்டர்களுடன் காணொலி காட்சி வழியாக அவர் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், அந்தமான் தீவுகள் ஒரு உலகளாவிய வர்த்தகத்துக்கான முக்கிய மையம். இதை ஒரு நீள பொருளாதார மையமாகவும், கடல்சார் புதிய தொழில் நிறுவன மையமாக மாற்றவும் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

    சென்னை டூ அந்தமான் ஃபைபர் கேபிள் இணையதள திட்டம் துவக்கம்.. இது சிறப்பான நாள்- பிரதமர் மோடி பெருமிதம்சென்னை டூ அந்தமான் ஃபைபர் கேபிள் இணையதள திட்டம் துவக்கம்.. இது சிறப்பான நாள்- பிரதமர் மோடி பெருமிதம்

    கடல்சார் கரிம மற்றும் தேங்காய் சார்ந்த பொருட்களின் வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களுக்கு, அந்தமான், நிக்கோபாரின் 12 தீவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த பிராந்தியம், அரசின் சுயசார்பு இந்தியா திட்டத்திலும், புதிய இந்தியாவின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கும்.

    சென்னை-போர்ட்பிளேர் நீர்மூழ்கி கண்ணாடி இழை திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம் இனி அந்தமான் தீவுகள், புற உலகுடன் ஆன்லைனில் தொடர்பு கொள்வதில் பிரச்சினை ஏற்படாது என்பதை உறுதி செய்யும் என்றார்.

    இந்த திட்டத்தின் மூலம் சென்னை மற்றும் போர்ட் பிளேயருக்கு இடையில் வினாடிக்கு 2x200 ஜிகாபைட் ஜிபிபிஎஸ் அலைவரிசையையும், போர்ட் பிளேயருக்கும் பிற தீவுகளுக்கும் இடையில் 2x100 ஜிபிபிஎஸ் வேகத்தில் இணைப்புகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Submarine optical fibre facility will bring lot of benefits to Andaman

    இதன்மூலம் இந்த தீவுகளுக்கு 4ஜி அலைவரிசையில் அதிவேக சேவை கிடைக்க உள்ளது. இந்த திட்டத்தின்மூலம், சென்னை-போர்ட்பிளேர் இடையே நம்பகமான, வலுவான, அதிவேக தொலைத்தொடர்பு, பிராட்பேண்ட் இணையதள சேவை வசதிகள் கிடைக்கும். இது அந்தமான் தீவுகளில் சுற்றுலா, வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும். பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகமாய் அமையும். வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும். தொலை மருத்துவம், தொலை கல்வி போன்ற மின் ஆளுமை சேவைகளை வழங்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக நிறுவனங்களும் பயன் அடையும்.

    இதன்மூலம் இந்த தீவுகளுக்கு 4ஜி அலைவரிசையில் அதிவேக சேவை கிடைக்க உள்ளது. இந்த இணைப்பு மூலம் அரசு நிர்வாகம், கல்வி மற்றும் இணைய வர்த்தகம் ஆகியவையும் மேம்படும். சுற்றுலா சேவையும் அதிகரிக்கும். அதன்மூலம் வேலைவாய்ப்புகளும் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Prime Minister Modi post his twitter page, Today, 10th August is a special day for my sisters and brothers of Andaman and Nicobar Islands. At 10:30 this morning, the submarine Optical Fibre Cable (OFC) connecting Chennai and Port Blair will be inaugurated.Modi said that high-speed broadband connectivity will help people of Andaman and Nicobar Islands to have a virtual connect with other parts of the country.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X