டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வைகோ ராஜ்யசபாவுக்குள் நுழைந்தால்.. பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி எம்பி பகீர் புகார்

Google Oneindia Tamil News

Recommended Video

    வைகோ மீது பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி எம்பி பகீர் புகார்- வீடியோ

    டெல்லி: வி கோபால்சாமி என்ற வைகோ ஒரு கிறிஸ்துவர் என்றும் அவர் ராஜ்யசபா எம்பியாவது இந்து கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்களை சீர்குலைக்கும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டி உள்ளார்.

    விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தொடரப்பட்ட தேசதுரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடந்த ஜூலை 5ம் தேதி ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    Subramanian Swamy accuses vaiko, His Rajya Sabha entry to rubbish Hindu culture and tradition

    எனினும் இந்த தீர்ப்பு ஒரு மாதத்திற்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, போட்டியின்றி ராஜ்யசபா எம்பியாகி உள்ளார்.

    இதன் மூலம் 23 ஆண்டுகளுக்கு பிறகு எம்பியாக வைகோ நாடாளுமன்றத்தில் கால் பதிக்க உள்ளார். வைகோ நாடாளுமன்றத்தில் விரைவில் நுழைய உள்ள நிலையில் அதற்கு பாஜக மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    கர்நாடகா எம்.எல்.ஏக்கள் ராஜினாமா- சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- தலைமை நீதிபதி கோகய் கர்நாடகா எம்.எல்.ஏக்கள் ராஜினாமா- சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- தலைமை நீதிபதி கோகய்

    இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வி கோபால்சாமி என்ற வைகோ ஒரு கிறிஸ்துவர். கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் குழப்பமான கருத்தியல் மீது உடனபாடு கொண்டவர். மிஷினரி கொள்கை உடைய இவர் ராஜ்யசபாவுக்குள் நுழைந்தால் இந்து கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்களை சீர்குலைக்கும்" என விமர்சித்துள்ளார்.

    English summary
    Subramanian Swamy told that V. Gopal swamy alias Vaiko is a Christian . His Rajya Sabha entry it seems is to further the Missionary agenda to rubbish Hindu culture and tradition.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X