டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிரிக்கெட்டில்தானே ஓய்வு.. 2024-இல் லோக்சபா தேர்தலில் தோனி போட்டியிட வேண்டும்.. சுப்பிரமணியன் சுவாமி

Google Oneindia Tamil News

டெல்லி: கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் தோனி, வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அழைப்பு விடுத்துள்ளார்.

Recommended Video

    தோனிக்கு ஃபேர்வெல் போட்டி நடத்த வேண்டும்.. ரசிகர்கள் கோரிக்கை

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆட்டக்காரர் தோனி ஏற்கெனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். இதைத் தொடர்ந்து டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார்.

    இந்த நிலையில் அவர் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஐபிஎல்லில் விளையாடுவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

    சுஷாந்த் தற்கொலை.. 3 மாதத்தில் ஓய்வு முடிவை எடுத்த தோனி.. இந்த வருடம் மிக மோசம்.. ரசிகர்கள் கலக்கம்!சுஷாந்த் தற்கொலை.. 3 மாதத்தில் ஓய்வு முடிவை எடுத்த தோனி.. இந்த வருடம் மிக மோசம்.. ரசிகர்கள் கலக்கம்!

    பிரதமர்

    பிரதமர்

    பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, அந்தந்த மாநில முதல்வர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என தோனி செய்த சாதனைகளை பட்டியலிட்டு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    தோனி ஓய்வு

    தோனி ஓய்வு

    அந்த வகையில் இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், கிரிக்கெட்டிலிருந்து மட்டுமே தோனி ஓய்வு பெறுகிறார். மற்ற எதிலிருந்தும் அல்ல. பல்வேறு கஷ்டங்களை எதிர்த்து போராடும் திறமை கொண்டவர். அனைவரும் மெச்சும் அளவிற்கு இந்திய அணிக்கு தலைமையேற்று அந்த அணியை முன்னெடுத்துச் சென்றார்.

    2024 மக்களவை தேர்தலில் போட்டி

    2024 மக்களவை தேர்தலில் போட்டி

    அது போல் பொது வாழ்க்கையிலும் அவர் ஈடுபட வேண்டும். அந்த தலைமைப் பண்பு பொது வாழ்க்கையிலும் தேவை. வரும் 2024 இல் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் அவர் நிச்சயம் போட்டியிட வேண்டும் என அரசியலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு முன்னர் கவுதம் காம்பீர் ஓய்வுக்கு பின்னர் பாஜகவில் இணைந்தார்.

    லோக்சபா தேர்தல்

    லோக்சபா தேர்தல்

    இதையடுத்து அவர் பாஜக சார்பில் கடந்த லோக்சபா தேர்தலில் டெல்லியில் போட்டியிட்டார். வெற்றி பெற்றார். அது போல் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அசாருதீன், நவ்ஜோத் சிங் உள்ளிட்டோர் அரசியலில் குதித்துள்ளார்கள். அது போல் தோனியின் தலைமையும் இந்த நாட்டிற்கு தேவை என பலர் அழைத்து வருகிறார்கள். அவர் இணைவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English summary
    BJP leader Subramanian Swamy invites Dhoni to contest in Loksabha elections 2024.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X