டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

7 தமிழர் விடுதலை விவகாரத்தில் ராஜீவ் குடும்பம் மவுனம் ஏன்? சு.சுவாமி கேள்வி

Google Oneindia Tamil News

டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர் தங்களை விடுதலை செய்யக் கோரும் விவகாரத்தில் சோனியா உள்ளிட்டோர் மவுனமாக இருப்பது ஏன்? என பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

7 தமிழரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. இதனடிப்படையில் 7 தமிழரை விடுதலை செய்ய முடிவு செய்து தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Subramanian Swamy questions Sonia Family on Seven Tamils release issue

இத்தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இழுத்தடித்து வருகிறார். இது தொடர்பாக 7 தமிழரில் ஒருவரான நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இவ்வழக்கில் இன்று, அமைச்சரவை தீர்மானம் மீது ஏன் முடிவு எடுக்கவில்லை என ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என தமிழக அரசு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்நிலையில் பாஜகவின் எம்.பி.யான சுப்பிரமணிய சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜீவ் கொலையாளி நளினி தாக்கல் செய்த மனுவை மத்திய அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும். அன்று ராஜீவ் காந்தியை கொலை செய்துவிட்டு இன்று கருணை கேட்கிறார்களாம்!

நான் தமிழீழ விடுதலைப் புலிகளை எலிகள் என்றுதான் அழைப்பேன். 'அந்த' குடும்பம் (ராஜீவ் குடும்பம் ஏன் மவுனமாக இருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
BJP Rajya Sabha MP Subramanian Swamy tweets," The Govt of India must firmly oppose in Madras HC the plea of Nalini the Killer conspirator of Rajiv Gandhi. These cowards who killed RG now want mercy!! I call “Tamil Tigers as elis ( rats). Why the “family” is silent? Since they are beneficiaries, they must speak up".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X