டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுஷாந்த் சிங்கின் மரணம் பக்கா கொலை.. இதுதான் ஆதாரம்.. லிஸ்ட் வெளியிட்டார் சுப்பிரமணியன் சுவாமி

Google Oneindia Tamil News

டெல்லி: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தற்கொலை அல்ல, கொலை என்று கூறி வந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அதற்கான ஆதாரங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் அனுப்பியுள்ளார்.

அண்மையில் சில பாலிவுட் நடிகர்கள் மரணம் அடைந்த சம்பவம் ரசிகர்களுக்கு தீரா துயரத்தை விட்டு சென்றது. ஆனால் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை சம்பவம் அவரது ரசிகர்களை புயல் போல் புரட்டி போட்டுவிட்டது.

அவர் தற்கொலைக்கான காரணத்தை கண்டுபிடித்து சொல்லுமாறு ஆவிகளுடன் பேசும் அமெரிக்கரிடம் ஏராளமானோர் மெயில்களை அனுப்பினர். சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலை என போலீஸார் தெரிவித்துள்ள நிலையில் அது கொலை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

என்னா நடிப்பு.. இழந்துட்டோமே.. சுஷாந்த் சிங் கடைசி படம் 'தில் பெச்சாரா' பார்த்து உருகும் ரசிகர்கள் என்னா நடிப்பு.. இழந்துட்டோமே.. சுஷாந்த் சிங் கடைசி படம் 'தில் பெச்சாரா' பார்த்து உருகும் ரசிகர்கள்

பட்டியல்

பட்டியல்

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சில ஆதாரங்களை வெளியிட்டு நான் ஏன் சுஷாந்தின் மரணத்தை கொலை என்கிறேன் என்பதற்கான ஆதாரங்கள் என பட்டியலிட்டுள்ளார். அவர் தற்கொலைக்கும் கொலைக்குமான பாயிண்ட்டுகளை பகிர்ந்துள்ளார். அவர் இறந்து கிடந்த இடத்தை பார்க்கும் போது அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்.

அறையின் சாவி

அறையின் சாவி

கழுத்தில் இருந்த அடையாளத்தின் நீளம், கழுத்தில் இருந்த அடையாளத்திற்கும் அவர் தற்கொலை செய்ததாக சொல்லப்பட்ட துணியின் அடையாளத்திற்கும் வித்தியாசம் உள்ளது. உடலில் பல்வேறு இடங்களில் அடையாளங்கள் காணப்படுகின்றன. சிசிடிவி காட்சிகள், சுஷாந்த் இறந்து கிடந்த அறையின் மற்றொரு சாவி காணாமல் போயிருந்தது.

சிபிஐ விசாரணை

சிபிஐ விசாரணை

சுஷாந்தின் மேலாளர் திஷா சாலியனின் தற்கொலை சம்பவம், சிம் கார்டு மாற்றம், நிதி நெருக்கடி ஏதும் இல்லை, வீட்டுப் பணியாளரின் மாறுபட்ட தகவல்கள் உள்ளிட்டவற்றால் இது தற்கொலை அல்ல, கொலை என்றே தெரிகிறது. சுஷாந்த் சிங் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்குள்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார் சுவாமி.

ரகசியம்

ரகசியம்

மேலும் இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி கடந்த 15-ஆம் தேதி கடிதமும் எழுதியுள்ளார். இந்த மரணத்தில் பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களுக்கு தொடர்பு இருக்கிறது. போலீஸின் துணையுடன் இந்த மரணத்தை தற்கொலை என்ன சொல்கிறார்கள் என்று சுவாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இறந்த சுஷாந்த், அவரது மேலாளர் திஷாவுக்கும் இடையே ஏதோ ரகசியம் மறைந்துள்ளது என்றும் சுவாமி தெரிவித்துள்ளார்.

English summary
BJP leader Subramanian swamy listed out some points Why I think Sushanth Singh Rajput was murdered.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X