டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சட்டசபை தேர்தல்: தமிழக பாஜக.வை உயிர்ப்பிக்க சு.சுவாமி தரும் ஐடியா!

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள இந்துத்துவா அமைப்புகளின் ஆலோசனைப்படி பாஜகவில் மாநில குழு ஒன்றை அமைக்க வேண்டும் என அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

கழகங்கள் இல்லாத தமிழகம்; தாமரை மலர்ந்தே தீரும்.. என்றெல்லாம் பாஜக தலைவர்கள் முச்சந்திக்கு முச்சந்தி எழுதி வைத்து முழங்கினார்கள். ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் ஆவேசத்தின் உச்ச குரலில் தாமரை மலர்ந்தே தீரும் என முழங்கியவர் தமிழிசை சவுந்தரராஜன்.

 25 வருஷத்துக்கு மோடியை அசைச்சுக்க முடியாது.. அசைச்சுக்க முடியாது.. சொல்வது சிவசேனா! 25 வருஷத்துக்கு மோடியை அசைச்சுக்க முடியாது.. அசைச்சுக்க முடியாது.. சொல்வது சிவசேனா!

பாஜக- அதிமுக தோல்வி

பாஜக- அதிமுக தோல்வி

இந்த வேகத்துடனேயே லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து அறுவடை செய்ய களத்துக்கு வந்தது பாஜக. ஆனால் பாஜகவை மட்டுமல்ல அதிமுகவையும் துடைத்து தூற எறிந்துவிட்டனர் தமிழக வாக்காளர்கள்.

தமிழகம் ,கேரளா புறக்கணிப்பு

தமிழகம் ,கேரளா புறக்கணிப்பு

வட இந்தியா முழுவதும் பாஜகவின் கொடி பறக்க தென்னகத்தில் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் தாமரை மலரவில்லை. ஒட்டுமொத்த தமிழக, கேரளா வாக்காளர்கள் இந்துத்துவா எதிர்ப்பு மனநிலையுடன் வாக்களித்துள்ளனர்.

இந்தியாவில் ஒரே கட்சி.. திமுக மட்டும்தான் இனி போட்டி.. பாஜகவிற்கு அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்!இந்தியாவில் ஒரே கட்சி.. திமுக மட்டும்தான் இனி போட்டி.. பாஜகவிற்கு அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்!

தமிழக தேர்தல்

தமிழக தேர்தல்

இந்நிலையில் பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில், தமிழக சட்டசபைக்கு இன்னும் 2 ஆண்டுகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய தமிழக பாஜக விருந்து உபசரிப்பு மையமாக இருக்கிறது.

தனித்துப் போட்டி

ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத், ஏபிவிபி ஆலோசனையும் தமிழக பாஜகவுக்கான மாநில குழு ஒன்றை அமைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தமிழக பாஜகவினரிடையே விவாதப் பொருளாகி உள்ளது.

திருமாவளவன்...அந்த ஒற்றை மனிதரின் வெற்றிக்காக உறங்காதிருந்த ஜனங்கள்... நெகிழும் பதிவுகள்!திருமாவளவன்...அந்த ஒற்றை மனிதரின் வெற்றிக்காக உறங்காதிருந்த ஜனங்கள்... நெகிழும் பதிவுகள்!

English summary
BJP Rajysa Sabha MP Subramanian Swamy posted tweet "The TN Vidhan Sabha goes to poll in two years.The present TN BJP Hospitality Centre needs to be wound up and a new body of political workers in consultation with RSS/VHP/ABVP needs to be set as TN BJP State Committee to prepare to contest all 234 seats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X