டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக சட்டசபை தேர்தல்: பாஜகவின் புதிய கூட்டணிகுறித்து ஆதரவாளர்களுடன் சு.சுவாமி ஆலோசனை

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வியூகம் வகுக்க ஆதரவாளர்களுடன் பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி ஆலோனை நடத்த உள்ளார்.

லோக்சபா தேர்தலில் அதிமுகவையும் இணைத்துக் கொண்டு மெகா கூட்டணி அமைத்தது பாஜக. ஆனால் தமிழகத்தில் வீசிய பாஜக எதிர்ப்பு அலையால் அதிமுக மட்டும் 1 தொகுதியில் வென்றது.

Subramanian Swamy urgest to new alliance for TN Assembly Elections

திமுக- காங்கிரஸ் கூட்டணி எஞ்சிய அத்தனை இடங்களையும் கைப்பற்றியது. வட இந்தியாவில் வீசிய மோடி அலை இந்த முறையும் தமிழகத்தை எட்டிப்பார்க்க கூட முடியாமல் போனது.

பாஜக பிரதானமாக நம்பிய அதிமுகவின் வாக்கு வங்கி சரிபாதி சரிந்தது; ஒரு பகுதி திமுகவுக்கு போனது. இதனால் பெரும் ஏமாற்றமடைந்தது பாஜக.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவரை மாற்ற வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி போன்றோர் குரல் கொடுத்து வருகின்றனர். டெல்லியில் மாநில பாஜக தலைவர்களுடன் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவும் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமி தமது ட்வீட்டர் பதிவில், தமது இந்துத்துவா அமைப்பான வி.எஸ்.எஸ். உறுப்பினர்களுக்கு ஒரு அழைப்பு விடுத்துள்ளார். அதில், தமிழக சட்டசபை தேர்தலுக்கான வியூகம் வகுக்க வேண்டும். தமிழகத்தில் புதிய கூட்டணி குறித்து வரப்போகும் புதிய தலைமைக்கு பரிந்துரைக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமியின் இப்பதிவுக்கு கருத்து தெரிவித்த நெட்டிசன் ஒருவர், பாஜக என்ற பெயரை மாற்றி திராவிட ஜனதா கட்சி என மாற்றி சினிமா நட்சத்திரங்களை சேர்த்து தமிழர் பெருமிதம் பற்றி பேசினால்தான் அக்கட்சி வாக்குகளைப் பெறும் என தெரிவித்துள்ளார்.

English summary
BJP Rajyasabha MP Subramanian Swamy tweets "I am calling a VHS meeting to theoretically explore if a new coalition formation could be set up in Tamil Nadu for 2021 TN Assembly elections and propose to the incoming new BJP President".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X