டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒன்னு அறிவு இருக்கணும்.. இல்லைன்னா துணிச்சல் இருக்கணும்.. இரண்டுமே இல்லையே.. சாமி பொளேர்!

நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள் குறித்து சுப்பிரமணிய சாமி விமர்சித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Nirmala Sitharaman Pressmeet

    டெல்லி: "ஒன்னு அறிவு இருக்கணும், இல்லைன்னா துணிச்சல் இருக்கணும்.. துரதிர்ஷ்டவசமாக நம்மிடம் இது இரண்டுமே இல்லை என்று சுப்பிரமணிய சாமி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
    பாஜக மூத்த தலைவர் சு.சாமிக்கிட்ட இருந்து எந்த ட்வீட் வந்தாலும், முதலில் அடிவயிற்றில் அள்ளு கிளம்புவது பாஜகவுக்குதான்.

    இதை பற்றி பாஜகவும் சு.சாமியை பகிரங்கமாக விமர்சிப்பதும் இல்லை. இதற்கு காரணம், காங்கிரஸ் தலைவர்களை பலரை கேஸ் போட்டு சிக்கலில் மாட்டி வைத்தவர், மாட்டி வைப்பவர். இது பாஜக தலைமைக்கு பெரிய பிளஸ்ஸாக இருப்பதால்தான் சாமியை கண்டு கொள்ளாமல் உள்ளது பாஜக.

    மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் அகிலேஷ் ரஞ்சன் விருப்ப ஓய்வு.. தலைவர் பதவி கிடைக்காததால் அதிருப்தி?மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் அகிலேஷ் ரஞ்சன் விருப்ப ஓய்வு.. தலைவர் பதவி கிடைக்காததால் அதிருப்தி?

    பதவி

    பதவி

    இருந்தாலும், ஏதாவது பெரிய பொறுப்பு தனக்கு கிடைக்கும் என்று சு.சாமி எதிர்பார்த்து காத்திருந்தார். அதிலும் நிதியமைச்சர் பதவி மீது இவருக்கு ஒரு கண் இருக்கத்தான் செய்தது. ஆனால், மோடி அரசு பதவி தரவே இல்லை. இப்படி பதவி தராதது குறித்தும் ட்விட்டரில் எதிர்கருத்துதான் சொல்லி இருந்தார்.

    பொருளாதாரம்

    நிதியமைச்சர் பதவியில் நிர்மலாவை நியமித்ததாலோ, என்னவோ, அவரது அறிவிப்புகளை அடிக்கடி விமர்சித்து வருகிறார் சு.சாமி. போன வாரம்கூட நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஒருசில சலுகைகளுடன் கூடிய அறிவிப்பினை வெளியிட்டிருந்தார் நிர்மலா. அதேபோல, நேற்றும் நாட்டின் பொருளாதாரத்தை சமாளிக்க 10 வங்கிகளை இணைப்பதற்கான அறிவிப்பினையும் வெளியிட்டிருந்தார்.

     நிர்மலா சீதாராமன்

    நிர்மலா சீதாராமன்

    இந்நிலையில், நிதியமைச்சர் நிர்மலாவின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக திரும்பவும் கருத்து சொல்லி உள்ளார் சு.சாமி. இது சம்பந்தமாக பதிவிட்டுள்ள ட்வீட்டில், "புதிய பொருளாதார கொள்கை எதுவுமே வராத நிலையில், 5 டிரில்லியன் பொருளாதாரத்திற்கு விடை கொடுக்க தயாராக இருங்கள். ஒன்று துணிவு இருக்க வேண்டும், அல்லது புத்திசாலித்தனம் இருக்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்று இருந்தால் மட்டுமே பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்க முடியும். ஆனால் நம்மிடம் இரண்டுமே இல்லை என்று தாக்கியுள்ளார்.

    ஸ்டிரைக்

    ஸ்டிரைக்

    ஏற்கனவே நிர்மலாவின் அறிவிப்புகளுக்கு எதிர்க்கட்சிகள் மாறி மாறி விமர்சினம் செய்து வருகின்றன. இன்னொரு பக்கம் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் என்று அறிவித்து விட்டார்கள். இது போதாமல், எரிகிற நெருப்பில் சு.சாமியின் பாஜகவுக்கு எதிரான ட்வீட்டானது, கிலோ கணக்கில் நெய்யை, அள்ளி அள்ளி ஊற்றுவது போல இருக்கிறது.

    English summary
    BJP Senior Leader Subramaniya Swamy has criticized Finance Minister Nirmala Sitharamans Economic Policies and her announcement
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X