Just In
வீட்டு உபயோக மானிய கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 5.91 குறைப்பு
டெல்லி: வீட்டு உபயோகத்திற்கான மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 5.91 குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, மானியமில்லாத சிலிண்டரின் விலை ரூ. 120.50 குறைக்கப்பட்டுள்ளது.
ஒரே மாதத்தில் 2வது முறையாக விலைக் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தையில் எரிபொருள் விலை குறைந்து வருவதைக் கணக்கில் கொண்டு இந்த விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை குறைப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்ட மானிய விலை எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ. 494.99 ஆக இருக்கும். தற்போது இது ரூ. 500.90 ஆக உள்ளது.
கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து ஆறு மாதங்களாக விலை உயர்ந்து வந்தது. டிசம்பரில்தான் விலை குறைக்கப்பட்டது. தற்போது 2வது முறையாக டிசம்பரில் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.