டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டிவிக்களை கட்டுப்படுத்தும் முன் இணைய மீடியாக்களை கட்டுப்படுத்தவும்-சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: இணைய டிஜிட்டல் மீடியாக்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றமே உருவாக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சுதர்ஷன் டிவியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பட்டன. இது தொடர்பான வழக்கில் யுபிஎஸ்சி ஜிகாதி என்ற அந்த நிகழ்ச்சிக்கு உச்சநீதிமன்றம் அதிரடி தடை விதித்தது.

Sudarshan TV Controversy: Make Rules for Digital Media, says Centre in SC

அப்போது கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அணு ஆயுதம் போன்ற நடவடிக்கையை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது என குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கில் ஊடக நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் உருவாக்கப்படும் என மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தது.

இதனிடையே உச்சநீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கின் விசாரணையின் போது, பிரிண்ட், எலக்ட்ரானிக் மீடியாக்களுக்கான கட்டுப்பாடுகள் ஏற்கனவே உள்ளன. உச்சநீதிமன்றம் விரும்பினால் இணையத்தை அடிப்படையாக கொண்ட டிஜிட்டல் மீடியாக்களுக்கான கட்டுப்பாடுகளை உருவாக்கலாம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாறப்போகும் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம்.. கட்டாயமாகும் பிஎப், அலவன்சும் கூடுகிறது.. நல்ல செய்தி மாறப்போகும் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம்.. கட்டாயமாகும் பிஎப், அலவன்சும் கூடுகிறது.. நல்ல செய்தி

மேலும், இணைய ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு எந்த ஒரு விதிமுறைகளும் இல்லை. இணைய ஊடகங்கள் மூலமாக அவதூறுகள் மட்டுமல்ல.. தனிநபர்கள், நிறுவனங்களுக்கு எதிரான கருத்துகளும் பரபப்படுகின்றன. பயங்கரவாதிகளும் கூட இந்த இணைய ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர் எனவும் மத்திய அரசு சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

English summary
Centre told Supreme Court that the court must start this exercise with rules for the web based digital media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X