டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரியங்கா நியமனம்.. அங்க ஒரு இடி.. இங்க ஒரு கடி.. பலே சுமித்ரா மகாஜன்!

பிரியங்கா காந்திக்கு சுமித்ரா மகாஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    முழு நேர அரசியலில் பிரியங்கா காந்தி... காங்கிரஸ் அதிரடி- வீடியோ

    டெல்லி: இங்க ஒரு இடி... அங்க ஒரு கடி என்பார்களே... அதுமாதிரி பிரியங்கா வருகை குறித்து சுமித்ரா மகாஜன் ஒரு கருத்தை சொல்லி உள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும், உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்கு பிராந்திய பொறுப்பாளராகவும் பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

    பிரியங்கா காந்தியின் இந்த நேரடி அரசியலில் இறங்கியதற்கு 3 நாட்களாக ஏராளமானோர் வாழ்த்து சொல்லி வருகிறார்கள். திறமையானவர், துணிச்சலானவர், பொறுமையானவர் என்றெல்லாம் பாராட்டுக்கள் கலந்த வாழ்த்துக்கள் பிரியங்காவுக்கு போய் சேர்ந்து கொண்டிருக்கிறது.

    சமாளிக்க முடியல

    சமாளிக்க முடியல

    இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனும் வாழ்த்து ஒன்றினை ட்விட்டர் பதிவில் சொல்லி உள்ளார். அதில், பிரியங்காவை பாராட்டுகிறாரோ இல்லையோ ராகுலை ஒரு இடி இடித்து அந்த பதிவை போட்டுள்ளார். "காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனி நபராக அரசியலை சமாளிக்க முடியவில்லை என்பதால்தான் பிரியங்காவை உதவிக்கு கூட்டி வந்துள்ளார்" என்று கூறியுள்ளார்.

    சகோதரியிடம் உதவி

    சுமித்ரா மகாஜன் தன் பதிவில் சொல்லி உள்ளதாவது: "பிரியங்கா நல்ல பெண்தான். ஆனால், அவரது நியமனம் மூலம் தெரியவருவது என்னவெனில் ராகுல் காந்திக்கு தனியாக இருந்து அரசியலை கையாளத் தெரியவில்லை என்பதுதான். அதனால்தான் தனது சகோதரியிடம் உதவி கேட்டுள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.

    ஆழம் பார்க்கிறார்

    ஆழம் பார்க்கிறார்

    நேற்றுகூட இதுகுறித்து இந்தூரில் செய்தியாளர்களுக்கு சுமித்ரா மகாஜன் அளித்த பேட்டியிலும், "ராகுலால் தனியாக அரசியல் செய்ய முடியாததால் தனது தங்கையை அரசியலில் களமிறக்கி ஆழம் பார்த்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசியல் விவகாரத்தில் நான் தலையிட விரும்பவில்லை. அது அவர்களது சொந்த விவகாரம்.

    ராகுலால் முடியவில்லை

    ராகுலால் முடியவில்லை

    இப்படி பிரியங்காவை அரசியலில் களம் இறக்கியுள்ளது மூலம் காங்கிரஸ் தலைவர் ராகுலால் தனியாக அரசியல் செய்ய முடியவில்லை என்பது மட்டும் தெரிகிறது. ஆனால், தலைமைப் பதவிக்கான திறனுடன் இருக்கும் நபர்களுக்கு, அவர்கள் முன்னேறும் வகையில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்" என்றார்.

    பாயின்ட் அவுட்

    பாயின்ட் அவுட்

    ஆக மொத்தம் பிரியங்காவுக்கு வாழ்த்து என்பது ஓரமாக ஒரு பக்கம் இருந்தாலும், ஒட்டுமொத்த கருத்தும் ராகுலை "பாயின்ட் அவுட்" பண்ணியேதான் உள்ளது. இதற்கு சுமித்ரா பேசாமல் பிரியங்காவுக்கு வாழ்த்து சொல்லாமலேயே இருந்திருக்கலாம்!!

    English summary
    Lok Sabha Speaker Sumitra Mahajan says, Rahul Gandhi got help from Priyanka to handle politics
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X