டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தல் அரசியலுக்கு குட்பை சொன்ன சுஷ்மா ஸ்வராஜ், சுமித்ரா மகாஜன்!

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜகவின் மூத்த தலைவர்களான முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் தேர்தல்களில் போட்டியிடுவது இல்லை என முடிவு எடுத்துள்ளனர். இருவரும் நாடாளுமன்ற செயலகத்தில் முன்னாள் எம்.பிக்கான அடையாள அட்டை கோரி விண்ணபித்துள்ளனர்.

சுஷ்மா ஸ்வராஜ் மத்திய பிரதேசத்தின் விதிஷா தொகுதி எம்.பி.யாக இருந்தவர். சுமித்ரா மகாஜனும் மத்திய பிரதேசத்தின் இந்தோர் லோக்சபா தொகுதி எம்.பி.யாக இருந்தவர்.

Sumitra Mahajan, Sushma apply for ex MP identity cards

சுஷ்மா ஸ்வராஜ் கடந்த ஆண்டே லோக்சபா தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை; அதே நேரத்தில் தீவிர அரசியலில் இருந்து விலகப் போவதில்லை என அறிவித்திருந்தார்.

7 முறை எம்.பி.யாக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், உடல்நலக் குறைவை முன்வைத்து லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை. தற்போது முன்னாள் எம்.பி.க்கான அடையாள அட்டை கோரி விண்ணப்பித்திருப்பதாக நாடாளுமன்ற லோக்சபா செயலகம் உறுதி செய்துள்ளது.

ஆனால் தமது நாடாளுமன்ற அரசியல் முடிவுக்கு வருவது தொடர்பாக எந்த ஒரு ட்வீட் உள்ளிட்ட பதிவையும் சுஷ்மா பதிவு செய்யவும் இல்லை. அதே நேரத்தில் 8 முறை எம்.பி.யாக இருந்த சுமித்ரா மகாஜன், பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

என்னது ஒரே நேரத்தில் தேர்தலா.. ஆளைவிடுங்க சாமி.. மோடி முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு என்னது ஒரே நேரத்தில் தேர்தலா.. ஆளைவிடுங்க சாமி.. மோடி முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

முன்னாள் எம்.பி.க்களுக்கான அடையாள அட்டைக்கு விண்ணப்பித்திருப்பதால் ராஜ்யசபா எம்.பி.யாகும் திட்டம் இருவருக்கு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

English summary
Senior BJP leaders Sushma Swaraj and Sumitra Mahajan applied for ex-member of Parliament identity cards.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X