டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாட்டுல எங்கேயும் நடக்காது.. இந்த பாஜக எம்பி பண்ணுன வேலையை பார்த்தீங்களா? கடுகடுக்கும் தொகுதி மக்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    Sunny Deol | சன்னி தியோல் நடவடிக்கையால் கடுகடுக்கும் தொகுதி மக்கள்- வீடியோ

    டெல்லி: படையப்பா திரைப்படத்தில் இடம் பெறும், மாப்பிள்ளை இவருதான்.. ஆனா அவரு போட்டிருக்கும் சட்டை என்னுது இல்லை.. என்ற புகழ்பெற்ற வசனத்தை நினைவுபடுத்தும் வகையில், பாஜக எம்பியும், நடிகருமான, சன்னி தியோல் நடவடிக்கை அமைந்துள்ளது.

    அப்படி என்ன செய்கிறார் என்கிறீர்களா.. இதுவரை எந்த ஒரு எம்பியுமே செய்யாத செயலில் இறங்கியுள்ளார், சன்னி தியோல். பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் எம்பிதான் இவர். வாக்கு எண்ணிக்கை நாளிலேயே, ஒரு பிரபல ஊடகவியலாளர், லைவ் ஒளிபரப்பில், இவர் பெயரை தவறுதலாக சன்னி லியோன் என வாசித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

    வெற்றி பெற்று எம்பியான பிறகும் பரபரப்பு குறையவில்லை. அப்படி என்னதான் செய்தார் என்கிறீர்களா?

    யார் மகனாக இருந்தால் எனக்கென்ன.. தூக்கி வெளியே போட வேண்டும்.. ஆவேசமான மோடி யார் மகனாக இருந்தால் எனக்கென்ன.. தூக்கி வெளியே போட வேண்டும்.. ஆவேசமான மோடி

    பிரதிநிதி

    பிரதிநிதி

    தனக்கு பதிலாக ஒரு பிரதிநிதியை உருவாக்கியுள்ளார் சன்னி தியோல். இவர் ஊரில் இல்லாத போது, ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்பது மற்றும் முக்கிய விஷயங்களை ஃபாலோ செய்வது அவர் வேலையாம். எழுத்தாளரான, குர்பிரீத் சிங் பால்ஹேரி என்பவர்தான்,தியோலை பிரதிநிதித்துவப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அந்த முக்கிய புள்ளி.

    எழுத்தாளர்

    எழுத்தாளர்

    "பஞ்சாப் மாநிலம் மொஹாலி, பால்ஹேரி கிராமத்தில் வசிக்கும் சுபிந்தர் சிங்கின் மகன் குர்பிரீத் சிங் பால்ஹேரியை எனது பிரதிநிதியாக நியமிக்கிறேன், எனது நாடாளுமன்றத் தொகுதியான குர்தாஸ்பூர் தொடர்பான முக்கிய விஷயங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன், ஆலோசிக்க இவரை, எனது பிரதிநிதியாக நியமிக்கிறேன்," இவ்வாறு தியோல் கையெழுத்திட்ட கடிதம் வெளிப்படையாக வெளியிடப்பட்டுள்ளது.

    கண்டனம்

    கண்டனம்

    சன்னி தியோலின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கண்டித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சுக்ஜீந்தர் சிங், இதுபற்றி கூறுகையில், குருதாஸ்பூர் தொகுதி மக்கள் தியோலுக்கு வாக்களித்தனர், அவருடைய பிரதிநிதிக்கு அல்ல. சன்னி தியோல் தனக்காக பிரதிநிதியை நியமிப்பதன் மூலம் குருதாஸ்பூர் தொகுதியின் வாக்காளர்களுக்கு துரோகம் இழைத்துள்ளார். ஒரு எம்.பி. தனக்கு ஒரு பிரதிநிதியை எவ்வாறு நியமிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் அவர்.

    24 மணி நேர சேவையாம்

    24 மணி நேர சேவையாம்

    ஆனால், குர்பிரீத் சிங் பால்ஹேரி இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்கிறார். எனது நியமனம் மூலம் குருதாஸ்பூர் மக்களுக்கு 24 மணி நேர சேவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்கிறார் அவர். அண்மையில் நடந்த லோக்சபா பொதுத் தேர்தலில் காங்கிரசின் சுனில் ஜாகரை, அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து தியோல் முதல் முறையாக லோக்சபா உறுப்பினரானார். ஆனால், தியோல் மும்பையில் வசித்து வருகிறார். தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அவரும் பங்கேற்றுக் கொண்டுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் மகன் இவர். பாஜக மதுரா தொகுதி எம்.பி.யும் நடிகையுமான, ஹேமமாலினி இவரது சித்தி முறையாகும்.

    English summary
    Actor-turned-politician Sunny Deol has appointed a representative in his parliamentary constituency Gurdaspur.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X