டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Breaking News Live: ஸ்டெர்லைட் - பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சிபிஐ இயக்குனரை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறு- வீடியோ

    தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

    தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இதற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தது. இன்னொருபுறம் இதற்கு எதிராக பாத்திமா பாபு மதுரை ஹைகோர்ட்டில் தொடுத்த வழக்கில், ஸ்டெர்லைட் ஆலையை இப்போது திறக்க கூடாது என்று ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியது.

    இதற்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை சுப்ரீம் கோர்ட் சென்றது. இந்த இரண்டு வழக்கிலும் தற்போது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்துள்ளது.

    Supreme Court allows Sterlite to open the factory  - LIVE UPDATES

    Newest First Oldest First
    1:36 PM, 8 Jan

    ஸ்டெர்லைட் விவகாரம்.. சட்டசபையில் திமுக வெளிநடப்பு

    தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்காததால் வெளிநடப்பு- ஸ்டாலின் பேட்டி

    11:57 AM, 8 Jan

    ஸ்டெர்லைட் விவகாரத்தில் மறு சீராய்வு மனு செய்யப்படும் - அமைச்சர் தங்கமணி

    சட்டசபையில் மு.க. ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் பதில்

    11:53 AM, 8 Jan

    ஸ்டெர்லைட் ஆலை குறித்து தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? - ஸ்டாலின்

    சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி

    மத்திய அரசுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் – ஸ்டாலின் கருத்து

    11:53 AM, 8 Jan

    எந்த சூழ்நிலையிலும் ஸ்டெர்லைட்டை அனுமதிக்க நாங்கள் தயாராக இல்லை - பாத்திமா பாபு

    இதை மக்களின் வாழ்வுரிமை கருத்தாக இதை முன்வைக்கிறேன் - பாத்திமா பாபு

    வாழ்வதா, தீர்ப்பை ஏற்பதா என்ற சூழலில்தான் இந்த தீர்ப்பை எதிர்நோக்குகிறோம் - பாத்திமா பாபு

    11:53 AM, 8 Jan

    ஸ்டெர்லைட் வழக்கில் என்னையும் சேர்க்க சுப்ரீம்கோர்ட் அனுமதி - வைகோ

    நீர் மாசு ஏற்படுவதைத் தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கலாம் என சுப்ரீம் கோர்ட் தகவல் - வைகோ

    ஸ்டெர்லைட் ஆலையை இயங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் சொல்லவில்லை - வைகோ

    11:52 AM, 8 Jan

    ஸ்டெர்லைட் ஆலை இயங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கலாம் என்றுதான் சொல்லியுள்ளது - வைகோ தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்தால்தான் ஸ்டெ்லைட்டை தடுக்க முடியும் - வைகோ

    கொள்கை முடிவை தமிழக அரசு எடுக்காது என்பதே உண்மை - வைகோ

    ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் - வைகோ

    11:52 AM, 8 Jan

    தமிழக அரசே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் - முத்தரசன்

    மாநில அரசு எதையும் கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டது - முத்தரசன்

    11:52 AM, 8 Jan

    கொள்கை முடிவு எடுக்க அனைவரும் கோரி வந்ததை தமிழக அரசு ஏற்கவில்லை - முத்தரசன்

    மாநில அரசு உடனடியாக சட்டரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் - முத்தரசன்

    தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் ப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானதைத் தொடர்ந்து ஆலை மூடல்

    ஆலை மூடப்பட்டதை எதிர்த்து ஸ்டெர்லைட் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு

    11:52 AM, 8 Jan

    ஆலையைத் திறக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது

    பசுமைத் தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது

    மதுரை உயர்நீதிமன்றக் கிளை தற்போதைய நிலை தொடரலாம் என உத்தரவிட்டிருந்தது

    இரு உத்தரவுகளையும் நிறுத்தி வைத்து தற்போது சுப்ரீம் கோர்ட் உத்தரவு

    11:51 AM, 8 Jan

    உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்த்தோம் -பாத்திமா பாபு
    11:51 AM, 8 Jan

    உச்சநீதிமன்றத் தீர்ப்பில் ஆச்சரியம் இல்லை, இதுதான் வரும் என்று தெரியும் - முகிலன்

    தமிழக அரசின் அரசாணை எதற்கும் பயன்படாத ஒன்று என்று அன்றே சொன்னோம் - முகிலன்

    ஸ்டெர்லைட் ஆலையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் - பாத்திமா பாபு

    அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூடி பேசி விவாதிக்கவுள்ளோம் - பாத்திமா பாபு

    11:51 AM, 8 Jan

    தற்போதைய நிலையே தொடரும் என்று சென்னை ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு தடை

    தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

    11:50 AM, 8 Jan

    ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு
    10:48 AM, 8 Jan

    தலைமை நீதிபதியின் தீர்ப்பை நீதிபதி எஸ்.கே கவுல் வாசிக்கிறார்

    இந்திய சட்டத்திற்கு இது மிகவும் சவாலான வழக்கு - நீதிபதி எஸ்.கே கவுல்

    10:47 AM, 8 Jan

    மத்திய அரசின் உத்தரவையும் அதிரடியாக ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்
    10:47 AM, 8 Jan

    மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

    சுப்ரீம் கோர்ட் உத்தரவால் மத்திய அரசுக்குப் பெரும் பின்னடைவு

    10:46 AM, 8 Jan

    சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
    10:45 AM, 8 Jan

    சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா வழக்கில் தீர்ப்பு வாசிக்கப்படுகிறது
    10:28 AM, 8 Jan

    நீதிபதிகள் எஸ்.கே கவுல், கே.எம் ஜோசப் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது

    தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விடுப்பில் சென்று இருக்கிறார்

    தலைமை நீதிபதி தீர்ப்பையும் நீதிபதி எஸ்.கே கவுல் வழங்குவார்

    10:28 AM, 8 Jan

    சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா வழக்கில் இன்னும் சற்றுநேரத்தில் தீர்ப்பு
    8:38 AM, 8 Jan

    சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

    தனது கட்டாய விடுப்பிற்கு எதிராக அலோக் வெர்மா வழக்கு தொடுத்தார்

    இந்த வழக்கு விசாரணை கடந்த டிச.6ம் தேதி நிறைவடைந்தது

    வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது

    தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்குகிறது

    காலை 11 மணிக்கு தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளது

    English summary
    Supreme Court allows Sterlite to open the factory.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X