டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தினகரனுக்கு குக்கர் சின்னம் கொடுக்குறதுல என்னதான் பிரச்னை... உச்சநீதிமன்றம் கேள்வி

Google Oneindia Tamil News

டெல்லி: டிடிவி தினகரனின் அமமுகவுக்கு பொதுச்சின்னமான குக்கர் சின்னத்தை ஒதுக்குவதில் என்ன பிரச்னை என தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அதிமுகவில் இருந்து தனி அணியாக செயல்படும் டிடிவி தினகரன் அணியினர் அமமுக கட்சியினை தொடங்கி நடத்தி வருகின்றனர். ஆர்கே நகரில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் குக்கர் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்.

இதையடுத்து தங்களது அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் வாய்ப்பு இருந்தால் தினகரனின் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என கூறியிருந்தது. ஆனால் இதுவரை தேர்தல் ஆணையம் எந்த பதிலும் அளிக்கவில்லை.

சிபிஐக்கு 2 வாரம்தான் டைம்.. அகிலேஷ் யாதவ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி சிபிஐக்கு 2 வாரம்தான் டைம்.. அகிலேஷ் யாதவ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி

குக்கர் கேட்டு முறையீடு

குக்கர் கேட்டு முறையீடு

தமிழகம் மற்றும் புதுவையில் வேட்பு மனுதாக்கலுக்கு கடைசி நாள் நாளை, குக்கர் என்கிற சின்னம் கிடைக்காததால் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு அமமுகவினரால் முடியவில்லை. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தினகரன் தரப்பு வழக்கறிஞர் குக்கர் சின்னம் தொடர்பாக அவசரமாக விசாரிக்க முறையிட்டார். இதையடுத்து உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பதாக அறிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம் கேள்வி

உச்சநீதிமன்றம் கேள்வி

இதனிடையே இன்று தேர்தல் ஆணைய வழக்கறிஞரிடம், டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு, தினகரன் பயன்படுத்தி வந்த பொதுச்சின்னமான குக்கர் சின்னம் ஒதுக்குவதில் ஆட்சேபனை இருக்கிறதா, என்ன பிரச்னை என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

குக்கர் கிடையாது

குக்கர் கிடையாது

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தில் 99a அடிப்படையில் அமமுக பதிவு செய்யப்படாததால் குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாதும் என்றும், பதிவு செய்யப்பட்ட கட்சிக்கே பொதுசின்னம் ஒதுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கறிஞர் விளக்கம்

வழக்கறிஞர் விளக்கம்

உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதங்கள் தொடர்பாக பேசிய டிடிவி தினகரனின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், "தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கே பொதுச்சின்னம் ஒதுக்கும் என வாதிட்டது. அதற்கு உச்ச நீதிமன்றம், நீங்கள் வாய்மொழியாகவே பேசுகிறீர்களே ஏன் எழுத்து பூர்வமாக பதில் தாக்கல் செய்யவில்லை என தேர்தல் ஆணையத்துக்கு எதிராக மிககடுமையாக கருத்தினை பதிவு செய்தது.

நாளை குக்கர் வழக்கு

நாளை குக்கர் வழக்கு

தேர்தல் ஆணைய அதிகாரியை இன்று நாங்கள் வரச்சொல்லியிருந்தோமே, அவர் எங்கே என்று கேட்க, அந்த பிரின்சிபல் செக்ரட்டரி முன்வந்தார். ஏன் நீங்கள் 15ம் தேதி கேஸ்க்கு இன்னைக்கு வரைக்கும் நீங்கள் கவுன்டர் போடலை, வெர்பலா, ஓரலா நீங்க சொல்ற விஷயத்தை வைத்து நாங்க முடிவு எடுக்க முடியுமா? இந்த நீதிமன்றம்
சட்டத்தில் என்ன சொல்கிறது என்பதை கேட்கிறது. அவர்(தினகரன்) பயன்படுத்தி வந்த குக்கர் சின்னத்தை கொடுப்பதாக இருக்கும் பட்சத்தில், தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு என்ன என்பதை கேட்வே உங்களை அழைத்தோம் என்றனர். கவுன்டர் போடாததால் குக்கர் சின்னத்தை வழங்குவது தொடர்பாக எதிர்வாதத்தை தேர்தல் ஆணையம் இன்று மாலை 5மணிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றார்கள். நாங்கள் நாளை தான் வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் என்று சொன்னோம். நாளை காலை 10 30 மணிக்கு விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள்" இவ்வாறு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறினார்.

English summary
Supreme Court ask EC, what problem if allot pressure cooker symbol to TTV Dhinakaran
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X